பாடசாலைகளின் பற்றாக்குறையை ஆர்ப்பாட்டங்களின்றி கையாளப்பட வேண்டும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தெரிவிப்பு.

(எப்.முபாரக்)                      

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் வளப்பற்றாக்குறைகளை ஆர்ப்பாட்டங்கள் இன்றி பக்குவமாக கையாள வேண்டும் என கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார்.                                      

திருகோணமலை புல்மோட்டை மத்தியக் கல்லூரியின் தொழிநுட்ப விஞ்ஞான அய்வு கூடம் இன்று வெள்ளிக்கிழமை (29) திறந்து வைக்கப்பட்டது.இதன் போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

 கல்வி அமைச்சர் தொடர்ந்து  பேசுகையிலே:                    

 கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் அவர்கள் பிரதேச மற்றும் மாவட்ட கல்வி தொடர்பாக மாகாண சபையில் பிரேரணைகளை பல முறை முன்வைத்து பேசினார் என்னோடும் பல முறை முரண்பட்டது குறித்த நான் பிழையாக கருதவில்லை அது நியாயமான கோரிக்கை என்பதை நான்அறிவேன் அத்துடன் அதிபர் ஆசிரியர்கள் தியாகத்துடன் செயல்படவேண்டும் மாணவர்களை தூண்டிவிட்டு வீதிகளில் போராட்டங்களை ஏற்படுத்துவது முறையற்றது அவைகள் பக்குவமாக கையாளவேண்டும்.


மாகாண சபை உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களின் வேண்டுகோள்களை நான் சரியானது என புரிந்து கொண்டேன் குறித்த ஆசிரியர்கள் பற்றாகுறை இன்னும் ஓர் இரு மாதங்களுக்குள் அன்வர் அவர்கள் குறிப்பிட்டது போன்று பாட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கல்வியல் கலூரியிரில் இருந்து வெளியாகும் ஆசிரியர்களோடு சேர்த்து நியமிக்கபாடுவர் என வாக்குறுதி அளித்தார்.
அத்தோடு கிழக்கு மாகாணத்தின் கல்வி விடயங்களை பக்குவமாக கையாளப்பட வேண்டும் ஆசிரியர்களின் சேவைகளின் போது பாராபட்சம் காட்டப்படக்கூடாது,இவ்வாரன விடயங்களுக்கு அரசியல் வாதிகள் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்றார்.