எதிர்காலத்தில் மாணவர்கள் எமது நாட்டில் நல்ல பிரஜைகளாக திகழவேண்டும் வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி(ரசிக்க சம்பத்)

(ஷமி.மண்டூர்)  எப்பொழுதும் நல்ல நடத்தை, கட்டுபாடு பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் மதித்து நடந்துகொள்ளும் மாணவர்களாக திகழவேண்டும். இந்த நாட்டின் எதிர்கால தூண்களாக விளங்குபவர்கள் இந்த மாணவர் சமூகமே காலப்போக்கில் நீங்கள் அனைவரும் ஒரு நல்ல வைத்தியரோ பொறியியலாளரே அல்லது சிறந்த கல்வி அதிகாரியாகவோ வரவேண்டும். என்று வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரசிக்க சம்பத்  குறிப்பிட்டார்.

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/பட்/பாலமுனை.அ.த.க பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் ஒழுக்கத்திறமையை விருத்தி செய்யும் வகையில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு (29) வெள்ளிக்கிழமை காலை அதிபர்.ச.கணேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

அவர் மேலும் உரையாற்றுகையில்.


''இன்று நான் பல இடங்களில் பார்க்கின்ற போது ஒரு சில சிறுவர்கள் தங்களது பாடசாலை கல்வியை இடைநிறுத்திவிட்டு நாளாந்த சம்பளத்திற்காக வேலை செய்கின்றார்கள். இப்படியான செயலில் ஈடுபடுபவர்களை தாய் தந்தையினர் கட்டுப்படுத்தி பாடசாலை கல்வியை தொடர்வதற்கு அவர்களுக்கு வழிகாட்டவேண்டும்.அவர்கள் கட்டுப்படாத பட்சத்தில் பொலிஸாரின் உதவிகளை நீங்கள் நாடலாம் என்றும் குறிப்பிட்டார். எமது நாட்டில் தற்போது வீதி விபத்துக்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. காரணம் வாகனச்சாரதிகளின் கவலையீனமே இதனால் பல உயிர்கள் பலிபோகின்றன. மாணவர்களாகிய நீங்கள் கட்டாயம் போக்குவரத்து விதிகளை பின்பற்றவேண்டும் பாடசாலைக்கு வரும் போதும் செல்லும் போதும் அவதானமாக வீதிகளில் செல்லவேண்டும். என்று குறிப்பிட்டார்.