களுதாவளை குருகுல திருஞானசம்பந்தர்குருகுல 27வது ஆண்டு நிறைவும் ஸ்தாபகர் தின விழாவும்

[ ரவிப்ரியா ]
மண்முனை தென் எருவில் பிரதேச செயலக பிரிவில்; அமைந்துள்ள களுதாவளை திருஞானசம்பந்தர் குருகுல 27வது ஆண்டு நிறைவும், ஸ்ரீமத் க.பொன்னையா சவாமிகளின் ஸ்தாபகர் தினவிழாவும் ப.குணசேகரம்
தலைமையில் சனியன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் கலாநிதி மூ.கோபாலரெத்தினம் கலந்து கொண்டார். சிறப்பு அதிதிகளாக அதிபர் பே.காப்தீபன், முன்னாள் குருகுல தலைவரும் பிரதி ஓய்வுநிலை அதிபருமான த.குணநாயகம்,ஆகியோரும், கௌரவ அதிதிகளாக சுயமபுலிங்க பிள்ளையார் ஆலய தலைவர் க.வேலாயுதபிள்ளை, வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய அதிபர் க.கணேசமூர்த்தி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை, முன்னாள், இந்நாள் நிர்வாக சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அதிதிகள் வரவேற்கப்பட்டு, நிகழ்வுகள் ஆரம்பமாகியது. மங்கல விளக்கேற்றலுடன் தலைமை உரையைத் தொடர்ந்து, வரவேற்பு நடனம், குருகுல மாணவர்களின் பாடல், வில்லுப்பாட்டு என்பனவற்றுடன் அதிதிகள் உரையம் இடம்பெற்றது.

அதிதிகள் தங்கள் உரையில், குருகுல மாணவர்களின் சிறந்த ஒழுக்கத்தை மெச்சிப் பேசினர். அவர்கள் சகல துறைகளிலம் பிரகாசிப்பதைப் பாராட்டினர். குருகுலம் அரம்பகாலம் முதல் இக்காலம் வரை அதன் வளர்ச்சிப் படிகளும் அனுபவங்களும் உரைகளில் இடம் பிடித்தன. ஸ்தாபகரின் அர்ப்பணிப்பான சேவை குறித்தும் நினைவுகூரப்பட்டது.
குருகுல சாதனை மாணவர்களுக்கான பரிசுகள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது. இம் மாணவர்கள ;மாகாண மட்டத்தில் 3 கிண்ணங்களையும், வலய மட்டத்தில் 10 கிண்ணங்களையும்., நாடகம், கலாநிதி க.நீதிராஜாவின் சிறப்பு கவிதை மற்றும் ;போட்டிப் பரீட்சைகளில் தலா ஒவ்வொரு கிண்ணத்தையம் பெற்று குருகுலத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். அத்துடன் பட்டிருப்பு கல்வி வலயம், மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுக்கொள்வதற்கும் உறுதுணையாகவும் இருந்துள்ளனர்.