எமது இருப்புகள் சவாலாக்கப்படுகின்றது எஸ் .தண்டாயுதபாணி!!


இருப்பை தக்க வைக்க இளைஞர்கள் மத்தியில் எமது பண்பாடுகளை தெளிவுபடுத்த வேண்டும். அந்தப்பணியை நிறைவேற்ற வேண்டிய  பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறது என்று கிழக்கு மாகாண கல்வி  அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பகல் தெரிவித்துள்ளார்

 மட்டக்களப்பில் எதிர்வரும் ஒக்டொபர் மாதம் இடம்பெற உள்ள கிழக்கு  மாகாண தமிழ் இலக்கிய விழா  தொடர்பான ஏற்பாட்டு கூட்டம் நேற்றைய தினம்  ஞாயிற்றுக்கிழமை (28) மண் முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம் தலைமையில் இடம்பெற்றது.

 இந்த விழா தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே  கிழக்கு மாகாண கல் வி  அமைச்சர் எஸ் தண்டாயுதபாணி,

எங்களுடைய பண்பாடு, எங்களுடைய இருப்புக்களுக்கு இந்த பண்பாட்டு விஷயங்களை வெளிப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.  சில வேளைகளில் எமது இருப்புகள்  சவாலாக்கப்படுகின்றது ஆகவே இந்த விடயங்கள் தொடர்பாக அடிக்கடி பேசிக்கொண்டே இருக்க வேண்டும் .

 சிலர் கூறுகின்றார்கள் பலம் பெருமை  பேசுகின்றார்கள் என்று அது பிழையான விடயம் எங்களுடைய இளையவர்களுக்கு எங்களுடையப விஷயங்கள் சொல்லப்பட வேண்டும், சொல்லப்பட்டு கொண்டே இருக்க வேண்டு ஆகவே அது பலம்பெருமை அல்ல.


 இன்றைய கால கட்டத்தில்  அரசியல் சமூக பொருளாதார மற்றும் பல்வேறு  மட் டத்தில்  இருந்து பார்க்கும் பொழுது எங்களுக்கு இருக்கக்கூடிய அழுத்தங்கள் குறிப்பாக  இந்த நாட்டிலே வாழுகின்ற தமிழ் மக்கள் தமிழ் பேசக்கூடிய மக்கள் இருக்கின்ற அழுத்தங்களை வைத்து பார்க்கும் போது நாம் விழிப்பாக இருக்க வேண்டிய கடமை எமக்கு உள்ளது.

 எங்களுடைய விஷயங்களை எங்களுடைய பெருமைகளை எங்களுடைய ஆற்றல்களை எங்களுடைய சாதனைகளை  நாங்கள் எங்களுடைய இளையவர்களுக்கு கேட்க கூடியவதாக சொல்ல வேண்டும்.

 அந்த வகையில் அக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள கிழக்கு மாகாண இலக்கிய விழாவை மிகவும் சிறப்பாக நடத்த அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

 கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா முன்னேற்பாட்டு கூட்டத்திற்கு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா. கிருஸ்ணபிள்ளை, கல்வி  அமைச்சின்  செயலாளர் நிஷங்க அபேயவர்த்தன, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா , மட்டக்களப்பு வலயக் கல்வி  பணிப்பாளர் கே .பாஸ்கரன், பட்டிருப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி என்புள்ளைநாயகம்,  மற்றும் பல்துறை  சார்ந்த  கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 தமிழ் இலக்கிய விழாவில் ஆய்வரங்குகள், பண்பாட்டு கலை நிகழ்வுகள், வித்தகர் விருது, இளம் கலைஞர்கள் கௌரவிப்பு, மலர் வெளியீடுகள் எனப் பல நிகழ:வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.