மட்டக்களப்பு சிறைச்சாலையில் நிர்மானிக்கப்பட்டுள்ள ஓவியங்கள் நீதிபதிகளினால் திறந்து வைப்பு

(எம்.எஸ்.எம்.நூர்தீன்,சிவம்)

மட்டக்களப்பு சிறைச்சாலையில் நிர்மானிக்கப்பட்டுள்ள ஓவியங்கள் இன்று (25.8.2016) வியாழக்கிழமை காலை நீதிபதிகளினால் திறந்து வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கே.எம்.யு.அக்பர் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் என்.பிரபாகரன் ஆகியோரின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும் மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள இரண்டு கைதிகளினால் மட்டக்களப்பு சிறைச்சாலை சுவரில் வரையப்பட்ட ஓவியங்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா மற்றும் களுவாஞ்சிகுடி மற்றும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றங்களின் நீதிபதி எம்.ஐ.றிஸ்வி ஆகியோர் திறந்து வைத்து திரை நீக்கம் செய்து வைத்தனர்.

இந்த வைபவத்தில் மட்டக்களப்பு சிறைச்சாலையின அத்தியட்சகர் கே.எம்.யு.அக்பர் மற்றும்; பிரதம ஜெயிலர் என்.பிரபாகரன் மற்றும் சிறைச்சாலை கைதிகள் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள் மற்றும் நலன்புரி உத்தியோகத்தர்கள் சிறைச்சாலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


இதன்; போது இந்த ஓவியங்களை வரைந்த இரண்டு கைதிகளுக்கு நினைவுச்சின்னம் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு முன்னாலுள்ள சுவரில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இந்த ஓவியங்களை இரண்டு கைதிகளே வரைந்து தமது திறமைகளை வெளிப்படுத்தினர். அதில் ஒரு கைதி விடுதலையாகி விட்டார்.

கைதிகளின் திறமையை வெளிப்படுத்தும் வகையிலும் அவர்களின் ஆற்றலைக் கொண்டு இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர்; என்.பிரபாகரண் தெரிவித்தார்.