மகிழடித்தீவு பொதுச்சுகாதார உத்தியோகத்தகளினால் விற்பனை நிலையங்கள் சோதனை

(படுவான் பாலகன்) சுகாதார திணைக்களத்தின் உணவு பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரியும், பொதுச்சுகாதார உத்தியோகத்தர்களும் இணைந்து கொக்கட்டிச்சோலை பகுதியில் அமைந்துள்ள விற்பனை நிலையங்களை சோதனையிடும் நிகழ்வு சனிக்கிழமை இடம்பெற்றது.

குறித்த பரிசோதனையின் போது நிறக்குறியீடு இடாத குளிர்பான போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.