செட்டிபாளையத்தில் கிராமிய கலைக்கு புத்துயிர் அளிக்கும் நடன, நாடக பயிற்சிப் பட்டறை

[ ரவிப்ரியா ]
மன்னர் காலம் தொட்டு ஆலயங்கள் கலை வளர்ப்பதில் பாரிய பங்களிப்புக்களை செய்து வந்திருக்கின்றன. சமூக சேவைகளிலும் தடம் பதித்திருக்கின்றன. அந்த வகையில் செட்டிபாளையம் சிவன் ஆலய நிர்வாகம் கலை,
சமூகப் பணிகளில் முன்மாதிரியாகத் திகழ்கின்றது.

எமது பிரதேசத்தில் மங்கிவரும் கிராமிய கலைகளுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என்பதில் தணியாத தாகத்துடன் செயற்பட்டுவருகின்றது. அதற்கென தனியாக நுண்கலை மன்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் கலைச் செயற்பாடுகளை பேணி வருகின்றது.

மண்மனை தென் எருவில் பிரதேச செயலகப் பிரிவானது கலைஞர்களின் கோட்டையாக இருக்கின்றது. குறிப்பாக கிராமிய கலைஞர்கள் பரந்தளவில் காணப்படுகின்றார்கள். கிராமங்கள் தோறும் கலைஞர்கள் இருக்கின்றார்கள்  கூத்துக்களில் தாங்கள் ஏற்ற பாத்திரப் பெயர் கொண்டே அவர்கள் இன்றும் அipக்கபபடும் அளவிற்கு சமூகத்தில் செல்வாக்குப் பெற்றவர்களாக காணப்படுகின்றார்கள்.

ஆனால் இன்று பாரம்பரியக் கலைகளின் பால் நாட்டம் செலுத்துவது அருகியே வருகின்றது. அந்த நிலை நீடிக்கக் கூடாது என்பதில் ஒத்தகருத்துடன் செட்டிபாளையம் நுண்கலை மன்றமும். மண்முனை தென் எருவில் பிரதேச செயலகமும் இணைந்து கிராமிய கலை சம்பந்தமாக ஒர் விழிப்புணர்வை எற்படுத்தும் நோக்கோடு நடன, நாட கலைப் பகிர்வு பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது.   
                 
 செட்டிபாளையம் சிவன் நுண்கலை மன்றமும் மண்முனை தென் எருவில் பிரதேச செயலகமும் இணைந்து செட்டிபாளையத்தில் நடாத்திய கலைப் பகிர்வு பயிற்சிப் பட்டறை முழு நாள் நிகழ்வாக நடைபெற்றது. இந்நிகழ்வு திருவருள் நுண்கலை மன்ற தலைவர் மு.பாலகிருஷ;ணன் தலைமையில் நடைபெற்றது. கலாசார உத்தியோகத்தர் த.பிரபாகரன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இப் பட்டறையில், பிரதம விருந்தினராக மண்முனை தென் எருவில் பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் பிரதம விருந்தினராகவும், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி விசேட விருந்தினராகவும் கலந்து கொண்டனர். மற்றும் ஓய்வுநிலை பாடசாலை அதிபரும். சிவன் பாலர் பாடசாலையின் அதிபருமான க.துரைராஜா சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டார்.

நாடகப் பட்றையை பிரதி அதிபரும் நாடகக் கலையில் நிபுணத்துவம் பெற்றவருமான, பி.ரவீந்திரனும், நடனப் பயிற்சிப் பட்டறையை பிரபல நடனக்கலை ஆசிரியையான திருமதி பவானி பிரபாகரனும் நடாத்தினர். பட்டறை நிறைவில் பயிற்சியாளர்களுக்கும் மாகாண மட்டப்போட்டியில் கிராமிய கலையில் வெற்றி பெற்றோருக்கும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.