மட்டக்களப்பில் புகையிரத்துடன் எஞ்சின் மோதி விபத்து போக்குவரத்து பாதிப்பு


(வரதன்)
மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் ஏற்பட்ட புகையிரத விபத்துக்காரணாமக   புகையிரதப் பெட்டி சேதமடைந்துள்ளதுடன்,புகையிரத  பாதையும் சேதமடைந்துள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலைய பிரதம நிலைய அதிபர்  தெரிவித்தார்
.
இன்று வியாழக்கிழமை காலை கொழும்புக்குப் புறப்படுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தபுகையிரதத்தில் மற்றைய புகையிரதத்தின் எஞ்சின் மோதியதில் புகையிரதப் பெட்டி ஒன்று சேதமடைந்துள்ளதுடன், எஞ்சின் ஒன்றும் புகையிரதப் பாதையிலிருந்து தடம் புரண்டு புகையிரதப் பாதையும் சேதமடைந்துள்ளது.

காலை 5 மணி 05 நிமிடமளவில் நடைபெற்ற இந்த விபத்து காரணமாக புகையிரதம் தடம்புரண்ட போதிலும் பயணிகள் எவருக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் பிரதம நிலைய அதிபர் எம்.பி.கபூர் தெரிவித்தார்.

. புகையிரதப் பாதைத்திருத்த வேலைகளுக்காக தற்போது மாகோவில் இருந்து திருத்தச் செயலணியும், பாதையிலிருந்து கீழே விழுந்துள்ள புகையிரதப் பெட்டியைத் தூக்கி பாதையில் தூக்கி நிறுத்துவதற்கான இயங்திரங்களும் ஏனைய இயந்திரங்களும் மட்டக்களப்புக்கு வந்து . திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புகையிரதத்தின் ஒரு புகையிரதப்பெட்டி சேதமடைந்தமையினாலும், பாதையிலிருந்து விலகியதனாலும் தற்போதைய நிலையில் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளது.