பேராசிரியர் செ. யோகராசாவின் பணி நயப்பு விழா


(சிவம்)

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் செ. யோகராசாவின் பணி நயப்பு விழா மற்றும் கருணையோகம் மலர் வெளியீடு என்பன சனிக்கிழமை (24) மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெற்றன.

பணி நயப்பு விழாவின் தலைவர் காசுபதி நடராஜாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்

நயப்புரைகளை தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் ரமிஸ் அப்துல்லாஹ், கிழக்குப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் அருட்திரு ஏ.ஏ. நவரட்ணம், பணிப்பாளர் கல்வி அமைச்சு கொழும்பு எஸ். முரளிதரன், மூத்த எழுத்தாளர் குப்பிளான் ஐ.சண்முகம், ஓய்வு நிலை மக்கள் வங்கி முகாமையாளர் மன்னார் க. திரவியம் ஆகியோர் நிகழ்த்தினர்.

வெளியீட்டுரையை கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் றூபி வலண்டினா பிரான்சிஸ் நிகழ்த்தினார்.

முதல்பிரதியை மட்டக்களப்பு தமிழ் சங்கப் பொருளாளர் வி.ரஞ்சிதமூர்த்திக்கு பேராசிரியர் வழங்கி வெளியீட்டு வைத்தார். பேராசிரியருக்கு மலையகம்,

அம்பாரை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களிலிருந்து பல்துறை சார்ந்தோரால் நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவித்ததோடு; வாழ்த்துப்பா மற்றும் வாழ்த்துப் பாடல் என்பன பாடப்பட்டன.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாழுமன்ற உறுப்பினர் எஸ். வியாளேந்திரன் விழா நாயகனுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவித்தார்.

கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவர் தம்பு சிவசுப்பிரமணியம், கல்விமான்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் வர்த்தகப் பிரமுவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.