சிறிநேசன் எம்.பியின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நூலகத்திற்கான தளபாடங்கள்


(சிவம்)

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மடஃ ஆறுமுகத்தான்குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலய நூலகத்திற்கு பிளாஸ்டிக் கதிரைகள் வழங்கப்பட்டன.

குறித்த பாடசாலையில் நீண்ட நாட்களாக நிலவி வந்த தளபாடப் பற்றாக்குறைய கருத்தில் கொண்டு அதன் அதிபர் சீ. தில்லைநாதனின் கோரிக்கைக்கு இணங்க ரூபாய் 120,000 பெறுமதியான கதிரைகள் கொள்வனவு செய்வதற்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.