"பள்ளிக்கூடம் போகவில்லை என்பதால் பிள்ளையை அடித்தேன்" நீதிவான் முன்னிலையில் தாய் வாக்குமூலம்

பள்ளிக்கூடம் போகவில்லை என்பதால் தான் அடித்தேன். ஆனால் எப்போதும் அடிப்பதில்லை'' இது தனது பிள்ளையை அடித்து சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றில் முற் படுத்தப்பட்ட தாய் தான் பிள்ளைக்கு அடித்தமை தொடர்பாக நீதிவானுக்கு தெரிவித்த பதிலாகும்.

ஆம், கடந்த வியாழக்கிழமை சமூக வலைத்த ளங்கள் பலவற்றிலும் தாயொருவர் தனது பிள் ளையை கடுமையாக அடித்து சித்திரவதை செய் வதை போன்ற வீடியோ பதிவொன்று வெளியாகி யிருந்தது. குறித்த வீடியோ பதிவானது வெளியா கியதையடுத்து கோப்பாய் பிரதேச செயலக சிறு வர் நன்னடத்தை அதிகாரிகள் மேற்கொண்ட நடவ
டிக்கையின் காரணமாக குறித்த தாய் கைது செய் யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் தொடர் பாக தெரியவருவதாவது,

கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் தாயொருவர் தனது ஒன்பது வயதான பிள்ளையை மிகவும் கொடூரமான முறையில் அடித்து சித்திரவதை செய்வதை போன்றதொரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பலவற்றிலும் வெளியாகியிருந்தது. இவ் வீடியோவினை பதிவு செய்திருந்தவர் அயல் வீட்டுக்காரர் ஒருவர். தினமும் குறித்த வீட்டில் குறித்த சிறுமிக்கு தாய் அடிக்கின்ற சத்தமும் அதனால் அச்சிறுமியின் அபயக்குரலும் கேட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையும் இவ்வாறானதொரு சத்தம் கேட்கவே வழமை போன்றதொரு நிகழ் வென நினைத்து குறித்த வீட்டுக்காரர் தனது வேலைகளை கவனிக்க சென்றுவிட்டார். இருந்த போதிலும் அன்று வழமையை விடவும் சிறுமியின் சத்தமானது அதிகமாகவே இருந்துள்ளது.

இதனையடுத்து குறித்த நபர் அங்கு நடப்பதை தனது வீட்டிலிருந்தவாறே அவதானித்துள்ளார். இதன்போது குறித்த சிறுமியை அவரது தாயார் மிகவும் கொடூரமான முறையில் அடித்து சித் திரவதை செய்துள்ளார். இருந்த போதிலும் இதனை தடுப்பதற்கு அவரால் இயலாமல் போயிருந்தது. காரணம் தாம் இதனை தடுக்க சென்று வேறு ஏதேனும் பாரதூரமான பிரச்சினை யில் சிக்கிவிட வேண்டுமென்ற அச்சத்தின் காரணமாக அவர் அங்கு நடந்தவற்றை தனது கெமராவில் பதிவு செய்துகொண்டார். தொடர்ந்து குறித்த வீடியோவினை தனது பேஸ்புக் வலைத் தளத்தினூடாக பகிர்ந்திருந்ததையடுத்து கோப் பாய் பிரதேச செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை அதிகாரி இதுவிடயம் தொடர்பாக கோப்பாய்
பொலிஸாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டைய டுத்து குறித்த தாயார் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

கைதுசெய்யப்பட்ட குறித்த தாயை கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியிருந்தனர். இதன்போது பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் மன்றில் ஆறு சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர். இதன்போது குறித்த சிறுமியை அடித்து சித்தி ரவதை படுத்தியமை தொடர்பில் அத்தாயை நீதிவான் வினவிய போது, குறித்த சிறுமி பள்ளி க்கூடம் போகவில்லை என்பதால் தான் அடித்தி ருந்தேன். ஆனால் எப்போதும் அடிப்பதில்லை என தெரிவித்திருந்தார். மேலும், குறித்த சிறுமி யின் உண்மையான தாய் குறித்த பெண்ணில்லை யெனவும் அவரது உண்மையான தாய் சிறுமியின் தந்தையின் முதல் மனைவியெனவும் சட்டத்தரணி கள் மன்றில் வாதிட்டிருந்தனர்.

சட்டத்தரணிகளின் கருத்தினையடுத்து இது தொடர்பாக சிறுமியின் தாயிடம் நீதிவான் வின வியபோது, குறித்த சிறுமி தமது பிள்ளையே என தெரிவித்திருந்தார். தொடர்ந்து நீதிவான் குறித்த சிறுமியின் தந்தையிடம் உங்களுக்கு எத்தனை மனைவி என வினவிய போது அதற்கு குறித்த நபர், தனக்கு மூன்று மனைவிகள் எனவும் அதில் ஒருவர் இறந்து விட்டதாகவும் மற்றைய நபர் தம்மைவிட்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும் தற்போதுள்ளவர் மூன்றாவது மனைவியெனவும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து குறித்த தாயை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டதுடன் பிள்ளைகள் அனைவரையும் சிறுவர் இல்லத்தில் வைத்து பராமரிக்கவும் சிறுமியை தாக்கியமை தொடர்பாக சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருந்த வீடியோ பதிவினை மொறட்டுவ பல்கலைக் கழகத்துக்கு அனுப்பி அதன் உண்மை தன்மை தொடர்பில் ஆய்வு செய்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டிருந்தார். அத்துடன் குறித்த சிறுமியின் தந்தையையும் விசாரணை செய்து மன்றுக்கு அறிக்கை சமர்ப் பிக்குமாறும் பொலிஸாருக்கு நீதிவான் உத்தர விட்டிருந்தார்.


சிறுமியின் வாழ்வியல் பின்னணி
இது இவ்வாறிருக்க குறித்த சிறுமியின் தந்தை யிடம் பேசியபோது அவர் பல அதிர்ச்சியான தகவல்களை தெரிவித்திருந்தார். இதன்படி தனது வயது அறுபது எனவும் தமது சொந்த ஊர் திரு கோணமலையெனவும் தாம் கடந்த 1980ஆம் ஆண்டளவில் சொந்த ஊரிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்திற்கு குடிபெயர்ந்திருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த 1988ஆம் ஆண்டு தாம் முதல் திருமணம் செய்திருந்ததாகவும் அவ்வாறு திருமணம் செய்திருந்த நிலையில் 5 பிள்ளைகள் பிறந்திருந்தனர் எனவும் தெரிவித்திருந்தார். இருந்த போதிலும் அவர்களில் நால்வர் பல்வேறு காரணங்களினால் உயிரிழந்துவிட்டனர் எனவும் தொடர்ந்து தனது மனைவியும் 2005ஆம் ஆண்டு உயிரிழந்துவிட்டதாகவும் இதனையடுத்து தாம் அதே வருடம் மீண்டுமொரு திருமணம் செய்திருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இரண்டாவது திருமணத்தின் போது இரண்டு பிள்ளைகள் பிறந்திருந்தனர் எனவும் கடந்த 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் தற்போதுள்ள பெண்ணின் தொடர்பு கிடைத்ததையடுத்து தனது இரண்டாவது மனைவி பிரிந்து சென்றிருந்ததுடன் தனது குறித்த இரண்டு பிள்ளைகளையும் அழைத்து சென்றுவிட்டதாகவும் இவ்வாறான நிலையில் தற்போதுள்ள மனைவிக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் நான்காவது பிள்ளையொன்றும் தாயின் கருவில் உள்ளதாகவும் தெரிவித்த குறித்த
சிறுமியின் தந்தை பாதிக்கப்பட்ட சிறுமி தற் போதைய மனைவியின் பிள்ளைதான் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் தாம் தற்போது சிர ட்டை வாங்கி அதனை கரியாக்கி விற்றே வாழ் க்கை நடத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

இருந்த போதிலும் குறித்த நபர் தற்போது வாழ்கின்ற பகுதியில் உள்ளவர்கள் கூறுகையில், அவர் சட்டவிரோதமான மதுபான விற்பனையிலும் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தனர். அத்துடன் குறித்த சிறுமியை அவரது தாயார் தினமும் தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும் அடிப்பதாகவும் அயலவர்கள் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறான நிலையில் குறித்த சிறுமியின் உண்மையான தாய் யாரென்பது தொடர்பில் முர ண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. அதாவது சட்டத்தரணிகள் குறிப்பிட்டது போன்று குறித்த சிறுமி அவளது தந்தையின் முதல் மனைவியின் பிள்ளையா அல்லது குறித்த கைதுசெய்யப்பட்ட பெண் கூறுவதைபோன்று அவரது சொந்த பிள் ளையா என்பது தொடர்பில் தெளி வற்ற நிலையே காணப்படுகின்றது.

விழிப்பூட்டப்பட வேண்டிய சமூகமும்
பாதுகாக்கப்பட வேண்டிய சிறுவர்களும்
இன்று எமது நாட்டில் இதுபோன்ற பல சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றே வருகின்றன. குறிப்பாக பெற்றோர்கள் தமது சுயவிருப்பு வெறுப்புகளுக்காக எதுவுமறியாத தமது பிள்ளைகளை பலியாக்கின்ற சம்பவங்கள் இடம்பெறுவதுடன் அந்தளவிற்கு சமூகமானது இன்னமும் விழிப்பூட்டப்படாதிருப்பது என்பது வேதனைக்குரிய விடயமாகும். அதுபோன்ற தொரு சம்பவமே இச்சம்பவமுமாகும்.