மட்டக்களப்பில் பிரமாண்டமான முறையில் ஆரம்பமான தமிழ் இலக்கிய விழா

(ஷமி.மண்டூர்)  கிழக்கு மாகாண கல்வி தகவல் தொழில்ஞட்பக்கல்வி,முன்பள்ளி கல்வி விளையாட்டு பண்பாட்டலுவல்கள் இளைஞர் விவகாரம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினரால் நடாத்தப்பட்ட தமிழ் இலக்கிய விழா இன்று வியாழக்கிழமை (20)ஆம் திகதி. முதல் நாள் நிகழ்வு (கிழக்கு மாகாண பண்பபட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்) சிவப்பிரியா-வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.


மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தர் சமாதிக்கு மலர் மாலை அணிவித்தவுடன் நிகழ்வு ஆரம்பமானது. இன் நிகழ்வானது பண்பாட்டு பேரணி  மட்டக்களப்பு கல்லடிப் பிரதேசத்தில் இருந்து ஆரம்பமாகி தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பிரதி பலிக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்வுகள் தமிழ் அன்னை வேடப்புனைவு போன்ற நிகழ்வுகளுடன் பிரதான வீதி வழியாக மட்டக்களப்பு மகஜன கல்லூரியைச் சென்றடைந்தது.

இந்த மூன்று நாள் நிகழ்வுகளுக்கு (கிழக்கு மாகாண பண்பபட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்) சிவப்பிரியா-வில்வரெத்தினம், ஜனாப்.எம்.ரி.ஏ.நிஸாம்(மாகாணக் கல்விப்பணிப்பாளர் மாகாண கல்வித் திணைக்களம் கிழக்கு மாகாணம்) கௌரவ.சி.தண்டாயுதபாணி (கல்வி அமைச்சர் கிழக்கு மாகாணம்) ஆகியோர் தலைமை தாங்கி நடாத்தவுள்ளனர்.
ஆத்தோடு கல்வி அதிகாரிகள் மாகாண சபை உறுப்பினர்கள்,பாராளமன்ற உறுப்பினர்கள்,கிழக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சின் வெயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் இன் நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.