மட்டக்களப்பில் நடைபெற்ற மாகாண தமிழ் இலக்கிய விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு

(படுவான் பாலகன்) கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் தமிழ் இலக்கிய விழாவின் இரண்டாம் நாள் மாலை நிகழ்வுகள் இன்று(21) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மகாஜனா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள மாகாண பணிப்பாளர் சிவப்பிரியா வில்வரத்னம் ஒழுங்கமைப்பில், மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தலைமையில் புரட்சிக்கமால் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் பரதம், நாட்டார் இசை, வசந்தன் கூத்து, றபான் புத்தாக்க நடனம், காவடி நடனம், கபரிஞ்சா நடனம், ஆகுதி நாடகம், கிராமிய நடனம் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றது.


இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை மற்றும் சிறப்பு விருத்தினர்கள், கலை ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இலக்கிய விழாவின் இறுதிநாள் நிகழ்வு நாளை(22) சனிக்கிழமை மாலை 03மணிக்கு நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.