பச்சை இலைக்கறி வகைகளில்தான் நச்சுத் தன்மை இல்லை - விவசாய போதனாசிரியர் எழில்மதி

[ ரவிப்ரியா ]
மண்முனை தென் எருலில் பிரதெச செயலகப் பிரிவில் 45 கிராமசேவகர் பிரிவுகளிலம், வீட்டுத்தோட்ட விழிப்பணர்வு செயலமர்வு நடைபெற்று வருகின்றது. அதில் 2250 பயனாளிகள் இணைந்துள்ளனர்  அதன் தொடர்ச்சியாக பெரியகல்லாற்றில் இடம்பெற்ற கருத்தரங்கில் விவசாய போதனாசிரியை ஏ.எழில்மதி பெரியகல்லாறு கிராமசேவகர் பிரிவுகளின் பயனாளிகளக்கு விளக்கமளித்தார்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் நஞ்சற்ற மரக்கறி வகைகள் உற்பத்தியாகும். கீரை மற்றும் இலைக்கறி, கிழங்கு வகைகளின் பயன்பாட்டை அதிகரித்தல், நோயற்ற வாழ்வு, தார்மீக பொறுப்புள்ள கமத்தொழில், குறைந்த வருமானமுள்ள குடும்பங்களின்  போஷhக்கை உறுதிப்படுத்தல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். எனக் குறிப்பிட்டதுடன், வீட்டுத் தோட்ட அபிவிருத்திக்கு வேண்டிய ஆலோசனைகளை வழங்குவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும், தெரிவித்தார். மானிய அடிப்படையில் உதவிகள் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இக் கருத்ரங்கின் ஆர்வமுடன் பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர். இச் செயலமர்வை வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர் இரா பிரேமராஜா, மற்றும் ஆனந்தலீலா, சுமதி ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.