தமிழ்நாடு முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி!

(ரவிப்ரியா)
அன்று வெண்ணிற ஆடையில்,
அறிமுகமாகி; கலை உலகின்.
அபிமானத்திற்குரிய தாரகையாய்,
அடுத்தடுத்து வெற்றிகள் குவித்தாய்!

அம்மு என்றால் ஜெயம்தான் என்று,
அழைப்புக்கள் குவிந்தவேளை,
அதிஸ்டவசமாக எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக.
அடித்தது உனக்கு ஜோகம்!

அந்த ஆயிரத்தில் ஒருவனின்.
அரவணைப்பினால் அமோக வரவேற்புடன்,
அருமையான சினிமா ஜோடியென,
அனைத்து ரசிகர்களினதும் பேராதவிற்குரியவளானாய்!

அடுத்தடுத்து சினிமாவில் வெற்றிவாகை சூடி,
அந்த பரமசிவன் கழுத்து பாம்புபோல், இருந்தும்,
அம்மா என்றால் அன்பு என்று அழுத்தமாய்,
அழகாகப் பாடவும் செய்தாய்!.
அசைக்கமுடியாத மக்கள் திலகத்தின்,
அரசியல் பாசறையில் பங்காளியானாய்!
அச்சம் என்பது மடமையடா என்ற,
அவர் பாணிலேயே பயணித்தாய்.

அமரத்துவம் அவர் அடைய,
அஞ்சாது இரட்டை இலையின்
அரசியாய் மகுடம் தரித்தாய்!
அத்தனை சவால்களையும் தகர்த்தாய்!.

அன்னை இந்திராவிற்குப்பின்; இந்தியாவில்,
அபூர்வமாக வந்துதித்த இரும்புச் சீமாட்டி நீ!
அடிமட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றி,
அவர்களின் அடிமனதில் அம்மாவாக நிலைத்தாய்!

அன்பு  வளர்ப்பு மகனின் ஆடம்பர திருமணத்தால்.
அவஸ்தைப்பட்டு விமர்சனங்கள் சுமந்தாய்!
அதிக சொத்துச் சேர்ப்பென சட்டம் வதைத்தும்
அவை மக்கள் அலையால் மறையவே செய்தது.

அம்மா என்ற மந்திரம் அனைத்தையும்.அறுத்தது!
அடைவார் தோல்வி என்று அடித்துச் சொன்னவர்களுக்கும்,
அதிர்ச்சி வைத்தியம்; அளித்தவள் நீ!
அடைக்கலமானது வெற்றி ஆறு தடவைகள்!

அன்னையர்களின் ஏகோபித்த பெருமைக்குரியவள் நீ!
அண்டைநாட்டு தமிழர்களின் மரியாதைக்குரியவள் நீ!
அனுதாபமும் அனுசரணையும் கொண்ட எம் தலைவி நீ!
அரசு ஆட்டம்காண அவதாரம் எடுத்தவளும் நீ!

அடிமை விலங்கறுக்க ஆயத்தமானவள் நீ!
அதற்கான தீர்மானங்களை முன் வைத்தவளும் நீ!
அரசுடன் முகஸ்துதி செய்யாமல் முட்டி மோதியவள் நீ!
அன்று இடறினாலும் இன்று எங்கள் இரட்சகன் நீயே!

அம்மாவே உன் காலத்தில் எமக்கு விடிவு நிச்சயம் என,
அடிமனதில் அசையாத நம்பிக்கை வைத்துக் காத்திருக்க,
அதிர்ச்சி தந்து நீயும் எமை அனாதையாக்கிச் சென்றதேன்
அக்கறையுள்ள உடன்பிறப்பே உனக்கு சாந்திகிட்டுவதாக

அன்புக்குரிய எமது இரத்தத்தின் இரத்தங்களே,
அலை கடல் பிரித்தாலும் நாம் இக்கரை இருந்தாலும் அடைமழையாய் நாம் இங்கு சிந்தும் கண்ணீர்
அருவியாய் ஓடிவந்து உங்கள் நெஞ்சோடு கலக்கட்டும்.