நத்தார் பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளரின் நன்மை கருதி மட்டக்களப்பு நகரில் நவீன பிலால் கிட்ஸ் ஜவுளிக் காட்சியறை


(சிவம்)
இயேசு பாலனின் பிறப்பைக் கொண்டாடும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் காந்திப் பூங்காவிற்கு எதிரே நவீன வசதிகளுடன் கூடிய பிலால் புதிய ஜவுளிக் காட்சியறை இன்று (09) திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் மற்றும் மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் ஆகியோர் புதிய காட்சியறையை திறந்து வைத்தனர்.

இயற்கை அழகுமிக்க காந்திப் பூங்கா வளாகத்திற்கு மேலும் அழகூட்டுவதைப் போல் நவீன காட்சியறை தலைநகரங்களில் உள்ள அமைப்பைப் பொல் அமைந்திருப்பது மட்டக்களப்பு மாநகரிற்கு மேலும் அழகு சேர்கின்றது என மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் தெரிவித்தார்.

புதிய நவீன வசதிகள் மற்றும் சௌகரியம் மிக்க காட்சியறையைத் திறப்பு விழா அதன் உரிமையாளர் பிலால் ஹாஜியார் தலைமையில் நடைபெற்றபோது அதைத் திறந்து வைத்து அவர் மேலும் உரையாற்றுகையில்

வாடிக்கையாளரின் நேரப்பழுவைக் குறைப்பதற்கு ஏற்றவாறு சிறுவர்களின் வயதுகளுக்கேற்ப இக்காட்சயிறை தரம் பிரித்திருப்பதும் மற்றும் ஒழுங்கமைத்திருப்பதும் மனதிற்கு கவர்ச்சியை ஏற்படுத்துவதோடு புத்துணர்ச்சியையும் ஏற்படுத்துகின்றது.; இத்தகைய முன்மாதிரியான வர்த்த நிலையத்தைப் போன்று நகரில் எமது வர்த்தகர்கள் அதிக காட்சியறைகளைத் அமைப்பது நகரிற்கு மேலும் அழகூட்டும் எனத் தெரிவித்தர்ர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக், மாவட்டச் செயலக  பிரதம கணக்காளர் எஸ். நேசராஜா, தமிழ்ச் சங்கப் பொருளாளர் வி. ரஞ்சிதமூர்த்தி,
வர்த்த சங்கப் பிரமுவர்கள், சிவில் சமூகத்தின் ஆலோசகர் எஸ். மாமாங்கராஜா, காந்தி சேவா சங்கத் தலைவர் கலாநிதி ஏ. செல்வேந்திரன், மட்டக்களப்பு லயன்ஸ் கழக அங்கத்தினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.