புதிய போக்குவரத்து அபராதம் - ஒரு மாதத்தில் அறிக்கை

போக்குவரத்து சட்ட விதிகளை மீறுவது தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள புதிய அபராத பத்திரத்தை தயாரிப்பதற்கான குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்த அறிக்கையானது இன்னும் ஒரு மாதத்துக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர எமது செய்திப் பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

தமக்கும் பேருந்து சங்கங்களுக்கும் இடையே இடம்பெறும் மற்றுமொரு பேச்சுவார்ததையின் பின்னரே இந்த அறிக்கை தாயரிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.



7 போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக குறைந்தபட்ச அபராதத் தொகையை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பது தொடர்பாக அரசாங்கத்தினால் யோசனை முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவுக்கும், போக்குவரத்து சங்கங்களுக்கும் இடையே பேச்சுவார்ததையொன்று இடம்பெற்றது.

இந்நிலையிலேயே அடுத்தக்கட்ட போச்சுவார்த்தைகளை நடத்தி அறிக்கை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.