சிறப்பு கட்டுரை- செட்டிபாளையம் சோமகலாநாயகி சமேத சோமநாதலிங்கேஸ்வரர் ஆலய புனராவர்த்தன அடிக்கல் நாட்டும் விழா

[ ரவிப்ரியா ]
மடடக்களப்பு  செட்டிபாளையம் சோமகலாநாயகி சமேத சோமநாதலிங்கேஸ்வரர் ஆலய பாலஸ்தான குப்பாபிஷேக விஞ்ஞாபனம் சனியன்று பிரதிஸ்டா பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தம் தலைமையில் நடைபெற்றது.
இவ்வாலயத்தை ஆலயத்தை முற்றாக அகற்றி இந்திய சிற்பிகளின் கைவண்ணத்தில் சிவாகமப்படி;  புத்தம் புதிய ஆலயமாக மாற்றும் கைங்கரியத்தில் ஆலய பரிபாலன சபை இறங்கியுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் விழா எதிர்வரும் 5ந் திகதி பக்திபூர்வமாக நடைபெற இருக்கின்றது.

கல்விமான்களின் புகலிடமாவும். பக்திமான்களின் புண்ணிய பூமியாகவும். கலை, கலாசாரம் பண்பாடு என்பவற்றை காப்பதில் கவசமாகவும், இயற்கையின் இருப்பிற்கு முக்கிய இடமாகவும் திகழ்கின்ற பழம்பெரும் கிராமம்தான் செட்டிபாளையம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆலயங்கள் இல்லாத கிராமங்களே இல்லை. எனினும் இருக்கும் சிவன் ஆலயங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தவகையில் செட்டிபாளையம் சிவன் ஆலயம் முதன்மை பெறுகின்றது. தெற்கு வாசல் கொண்ட ஒரே ஆலயம் என்ற பெருமையும் அதற்கு உண்டு. இதனால் சிவன் பக்தர்களை ஈர்க்கின்ற ஆலயமாக இது நீண்டகாலமாக இருந்து வருகின்றது.       .

1940 காலப் பகுதியில் ஒலைக் குடிசையடன் எளிமையாக இந்தியாவில் இருந்து வருகைதந்த  ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி சுவாமியால் ஆரம்பிக்கப்பட்டது. அவரின் நீண்டகால வழிநடாத்தலில் இளைஞர் சங்கங்கள் அமைக்கப்பட்டு ஆலயம் பரிபாலிக்கப்பட்டு வந்தது.

1970ல் கற்கோயில் கட்டும் பணியை சுவாமி அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தார். உறுப்பினர்களின் பிடி அரிசி திட்டத்தின் கீழ் பெற்ற வருமானவே ஆலயம் அமைப்பதற்றகான அரம்ப நிதியாக இருந்தது., பொதுமக்கள் ஆலயத்தின் மீது கொண்ட அசையாத நம்பிக்கையால்  வழங்கிய அதரவால் ஆலய கட்டுமானப்பணி வேகமாக நடந்தது.

1977ல் சுவாமி சமாதி அடைந்தபோதும், அவரின் போதனைகளால் மனத் தூய்மையும். ஆன்மிக நாட்டமும் கொண்ட செட்டிபாளையத்து மக்கள் இவ்வாலயத்தைப் பூர்த்தி செய்வதில் பாகுபாடின்றி நிறையவே பங்களிப்புச் செய்தனர். 

1981.08.18 இந்தியாவிலிருந்து வவைழைக்கப்படட லிங்கம் ஆகமமுறைப்படி பிரதிஸ்டை செய்யப்பட்டது. 1996ல் பக்தர்களின் பேராதவால் ஆலயத்திற்குத் தேவையாக இருந்த மணித்தூண் நிர்மாணிக்கப்பட்டதுடன். வைரவர் கிரகசாந்தி கோயில் என்பன அமைக்கப்பட்டு, கும்பாபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது.

2015ல் பவள விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்வாலயத்தின் நிருவாக சபை கட்டுக் கோப்புடன். பல்வேறு சமூகப்பணிகளையும் கச்சிதமாகச் செய்து வருகின்றது. திருப்பணியில் திருப்திகரமாக வீண் ஆடம்பரமின்றி சைவ நெறி தவறாமல் விளங்கும் இவ்வாலய நிர்வாக சபை மக்கள் சேவையே மகேசன் சேவை என தொண்டாற்றுவதிலும் முன்மாதிரி காட்டுகின்றது.

 மக்கள்தான் நிர்வாகம் நிர்வாகம்தான் மக்கள் என்ற சமத்துவ நிலை கடைப்பிடிக்கப்பட்டு வருவதால். தீhமானங்களை எட்டுவதிலும், செயற்படுத்துவதிலும், ஒருமைப்பாடு நிலவுவதால் எந்தப் பாரிய பணியையும் இலகுவாகச் செய்து முடிக்கும் ஆற்றல் இவர்களிடம் காணப்படுகின்றது.

தற்போது இவர்கள் கையில் எடுத்துள்ள பணியே ஆலயத்தை முற்றுமுழுதாக பதிதாக புனரமைக்கும் பணி. முதற் கட்டமாக 25.112016 பாலஸ்தானம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கண்ணீர் மல்க மூலஸ்தானத்திலிருந்து முறைப்படி லிங்கம் நகர்த்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் பதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற இருக்கின்றது. சிவனருளால் ஆலயத்தை துரிதமாக பூர்த்தி செய்யலாம் என்ற நம்பிக்கையுடன் ஆலய நிர்வாகம் சிறந்த திட்டமிடலுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.. ஆலயத்திற்கான வரைபடம் இத்துறைசார்ந்த இந்திய பொறியியலாளர் ஒருவரால் வரையப்பட்டிருக்கின்றது.

ஆலயத்துள் அமைய இருக்கும் ஆலயங்களுக்கு கிராம மக்களே தனித்தனி பொறுப்பேற்றுள்ளனர். விசாலமான அடக்கமான அனைத்துக் கிரியைகளையும் ஆற்றக்கூடிய ஆலயமாக இது பூர்த்தி செய்யப்பட இருக்கின்றது. இதில் பஞ்ச தள இராஜகோபுரமும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. பக்தர்களின் நன்கொடையும் எதிர்பார்க்கப்படுகின்றது.