மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழிற்சாலையினை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு தொழிலை வழங்கவேண்டும்! பாராளுமன்றத்தில் ஶ்ரீநேசன் எம்.பி

(ஆயித்தியமலை நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை காகித ஆலையில் அது இயங்கிய காலத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொழில் புரிந்தனர். அதேவேளை இவ் ஆலையினால் 12ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பெறக்கூடிய நிலமை காணப்பட்டது. அது மாத்திரமன்றி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு தொழிலை பெறக்கூடியதாகவும் காணப்பட்டது. என பாராளுமன்றத்தில் ஞா.சிறிநேன் உரையாற்றினார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில், இன்றைய நிலையில் இந்த தொழிற்சாலை முற்றுப்புள்ளி நிலைக்கு சென்றிருக்கின்றது. இறுதியாக இத் தொழிற்சாலையில் கடமையாற்றிய 15 தொழநுட்ப உத்தியோகத்தர்களையும் நீக்கியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

எனவே மொத்தத்தில் பார்க்கும்போது மட்டக்களப்பு மாவட்டத்தில்  ஓட்டுத் தொழிற்சாலைகள்,அரிசி ஆலை, அரச அச்சக நிலையம் பேன்றவை யுத்தத்தினால்தான் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் தற்போது யுத்தம் இல்லை. மக்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் மீண்டும் இந்த தொழிற்சாலைகள் இயங்க வேண்டும் என்பதாகும். 

 எமது மக்கள் மீண்டும் ஓர் விரக்தி நிலைக்கு செல்லக்கூடாது, அந்த விரக்தி நிலையினால் மீண்டும் அரசுக்கு எதிராக  போர்குணத்தை பெறக்கூடாது என்கின்ற எண்ணத்தில் எமது மக்கள் உள்ளனர்,  

எனவே யுத்தங்களால் பாதிக்கப்பட்டு பலவற்றை இழந்து வாழ்ந்துகொண்டிருக்கும் எமது இளைஞர் யுவதிகளுக்கு அவர்களின் மீள் எழுச்சிக்கான நிலமையினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் தொழிற்சாலைகள் மீண்டும் இயங்கச் செய்ய வேண்டும்.
எனும் விடயங்கள் பற்றி  நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன் உரையாற்றினார்.

இதன்போது சம்மந்தப்பட்ட அமைச்சரினால் வாழைச்சேனை காகித ஆலையினை மீள அபிவிருத்தி செய்து திறப்பதற்காக அமைச்சரவையில் பிரேரணை சமர்ப்பிக்கப்படுமென உறுதியளிக்கப்பட்டது.