கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உலக மெய்யியல் தினக்கொண்டாட்டம்.


(துறையூர் தாஸன்)

கிழக்குப் பல்கலைக்கழகத்தினுடைய வரலாற்று நகர்வில், இவ்வருடம் உலக மெய்யியல் தினமானது வெகுசிறப்பாக இன்று கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக பதில் உபவேந்தர் கலாநிதி ஜெ.கருணாகரன், கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி மு.ரவி, கலை கலாசார பீடத்தினுடைய விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

உலக மெய்யியல் தினத்தினை 2002 ஆம் ஆண்டு UNSCO  நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது. இத்தகைய மெய்யியல் தினத்தினை கிழக்குப் பல்கலைக்கழக மெய்யியல் துறையினர் 'மெய்மை' என்னும் சஞ்சிகை வெளியீட்டுடன் அரங்கேற்றினர்.



இவ்விழாவில் பல்வேறுபட்ட கலையாற்றுகை நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டன. அந்தவகையில் 'சோக்கிரட்டீஸின் இறுதிப்பயணம்' எனும் தலைப்பிலான நாடகம், கவிதை, நடனம் ஆகிய நிகழ்வுகளை மெய்யியல் துறை மாணவர்கள் அளிக்கை செய்திருந்தனர்.மற்றும் மெய்யியல் சிந்தனையாளர்களின் உருவப்படங்கள் திரைநீக்கம் செய்யப்பட்டும் வைத்தன.

மேலும் இவ்விழாவில் கலை கலாசார பீடாதிபதியினை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. உலக மெய்யியல் தின கொண்டாட்டத்தினை இனி வருங்காலங்களில்  'மெய்மை' நூல் சஞ்சிகையோடு அரங்கேற்ற மெய்யியல் துறையினர் துணிந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.