தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நீர்க்குழாய் பெருத்துனர் பயிற்சி நெறி ஆரம்பம்

(மண்டூர்.ஷமி)) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர்,யுவதிகளின் எதிர்கால நன்மை கருதி அவர்களுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நேக்கில் அவர்களுக்கான நீர்க்குழாய் பெருத்தனர் பயிற்ச்சி நெறி ஆரம்பிக்கும் நிகழ்வு  கடந்த திங்கள் (5) அன்று தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இணைப்பாளர் சுந்தரலிங்கம் தலைமையில் தம்பலவத்தை பிரதேசத்தில் நடைபெற்றது.

நேர்முக பரீட்சை மூலம் தெரிவுசெய்யப்படுகின்ற இளைஞர்,யுவதிகளுக்கு நீர்க்குழாய் பெருத்துதல் பயிற்ச்சிகள் ஆறு மாதகால வழங்கப்படவுள்ளதாகவும் பின்னர் அரச தனியார் நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்களில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் பயிற்ச்சி நெறிகளை பூர்த்தி செய்கின்றவர்களுக்கு சர்வதேச தரத்திலான சான்றிதழ் வழங்கப்படும் என்று மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.

இன் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராசா, கோ.கருணாகரம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இணைப்பாளர் சுந்தரலிங்கம் இளைஞர்,யுவதிகள் எனப்பலரும் கலந்து கொணடனர்