மட்டு-வாழைச்சேனையில் எயிட்ஸ் விழிப்புணர்வு பேரணி!

(வாழைச்சேனை)
வாழைச்சேனை பிரதேசத்தில் உலக  எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி இன்று(1) காலை இடம்பெற்றது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி நவரெட்ணராஜா தலைமையில் நடைபெற்ற இவ் விழிப்புணர்வு பேரணி வாழைச்சேனை சுற்றுவட்ட (பெற்றோல் செற் சந்தி) சந்தியில் ஆரம்பித்து வாழைச்சேனை பிரதான வழியாக பேத்தாழை குகநேசன் கலாச்சார மண்டபம் வரை ஊர்வலமாக சென்று

ஊர்வலத்தின் முடிவில் எயிட்ஸ் நோயை கட்டுப்படுத்துவது தொடர்பான கருத்தமர்வும் இடம்பெற்றது.

எயிட்ஸ் நோயை கட்டுப்படுத்த அனைவரும் ஒன்றிணைவோம், வெல்வோம் வெல்வோம் எயிட்ஸ் நோயை வெல்வோம், காண்போம் காண்போம் எயிட்ஸ் நோயை இனம் காண்போம் போன்ற தொனிப்பொருளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட இப் பேரணி



பிரதான வீதி வழியாக வர்த்தக நிலையங்கள், பாதசாரிகள், பயணிகள் போன்றவர்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கியதுடன் ஒலிபெருக்கியில் எயிட்ஸ் விழிப்புணர்வு கோசங்கள் எழுப்பப்பட்டும் ஊர்வலம் சென்றது.

ஆட்டோக்கள் பாதாதையுடன் சென்றதும் ஒரு விசேட அம்சமாக காணமுடிந்தது.

இப்பேரணியில் பிரதேச செயலகத்தின்  உத்தியோகஸ்தர்கள் பிராந்திய சுகாதார சேவைகள், பணிப்பாளர், அதன் ஊழியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள, அதன் ஊழியர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், சுகாதார  ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், ஆட்டோ சங்கத்தினர், சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள், பொலீஸார், மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.