வாழ்வின் எழுச்சி சிறுவர் கெக்குளு கலாசாரப் போட்டியில் கிரான் பிரதேச மாணவர்கள் தேசிய மட்டத்தில் முதலிடம்

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தேசிய மட்ட வாழ்வின் எழுச்சி சிறுவர் கெக்குளு கலாசாரப் போட்டியில் கிரான் பிரதேச செயலகம் சார்பில் பங்குகொண்ட சந்திவௌி சித்திவினாயகர் கனிஸ்ட வித்தியாலய மாணவர்கள் குழு நடனம் போட்டியில் தேசிய மட்டத்தில்1ஆம் இடத்தினைப் பெற்றுக்கொண்டனர்.

இப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று 02ஆம் திகதி சந்திவௌி சித்திவினாயகர் கனிஸ்ட வித்தியாலயத்தில் அதிபர் ரி.கணபதிப்பிள்ளை தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கிரான் பிரதேச உதவி பிரதேச செயலாளர் ஜி.அருணன், கல்குடா வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ரி.ரவி, கோட்டக் கல்விப்பணிப்பாளர் என்.குணலிங்கம், வாழ்வின் எழுச்சி திணைக்கள சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.பி.வரதராஜன் மற்றும் பாடாலை ஆசிரியர்கள் அபிவிரித்தி சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தினால் ​தேசிய ரீதியில் வருடாந்தோறும் நடாத்தப்பட்டுவரும் இப் போட்டி நிகழ்வு இவ் வருடம் கொழும்பு மாலம்பே ராகுல பாலிகா வித்தியாலயத்தில்  இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.