வவுணதீவில் வருமானம் குறைந்த வறிய குடும்பங்களைச்சேர்ந்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள்

மாவட்ட அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்தில் வருமானம் குறைந்த வறிய குடும்பங்களைச்சேர்ந்த மாணவர்களுக்கு புதன்கிழமையன்று (7ஆம் திகதி) துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டது.


இதன்போது,காஞ்சிரங்குடா,காந்திநகர்,பன்சேனை, மங்கிகட்டு ஆகிய நான்கு கிராமங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட தூர இடங்களிலிருந்து பாடசாலை செல்லும் 11 மாணவர்களுக்கு பாடசாலை பயணத்திற்கென மாவட்ட அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் பிளான் சர்வதேச நிறுவனத்தினால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது.

மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர்,உதவி திட்டப் பணிப்பாளர் ரி.நீர்மலராஜ், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்,சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்,பிரதேச உளவளத்துணை உத்தியோகத்தர் மற்றும் பிளான் சர்வதேச நிறுவன உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கிவைத்தனர்.