'தண்டப்பணத்தினை அறவிட்டு ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே'

(எப்.முபாரக் ) 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தினை விலக்குமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை  திருகோணமலை பஸ் நிலையத்திற்கு முன்பாக தனியார் பஸ் போக்குவரத்து ஊழியர்களும், திருகோணமலை மாவட்ட முச்சக்கர வண்டி ஒட்டுனர்களும் இணைந்து எதிர்ப்பு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இன்று காலையில் ஏற்பட்ட கவனயீர்பு போராட்டத்தில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து தூர சேவைகள், மற்றும் உள்ளூர் சேவைகள் எதுவும் இடம்பெறவில்லை.


 இதனால் நாளாந்தம் தொழிலுக்குச் செல்வோர் மற்றும் பிரயாணிகள் பலரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இலங்கை போக்குவரத்துச் சேவை பஸ்கள் மட்டுமே தூர மற்றும் உள்ளூர் சேவைகளில் ஈடுபட்டன.                                       '25,000 தண்டப்பணத்தினை விரைவில்  நீக்கு, தண்டம் எமக்கு வேண்டாம் ,அரசே தனியாரை கவனத்தில்  கொள்,  தண்டப்பணத்தினை அறவிட்டு ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே'  போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்ட காரர்கள் ஏந்தியிருந்தனர்.