விவசாயி - பாற்பண்ணையாளர் மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில்

திருக்கோவில் பிரதேசத்தைச்சேர்ந்த வட்டமடு மேய்ச்சல் தரைப்பகுதியில் விவசாயி - பாற்பண்ணையாளர் மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருக்கோவில் வைத்தியசாலையில் கால்நடைவளர்ப்பாளர் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிசார் விசாரணை செய்துவருகின்றனர்.


மேய்ச்சல் தரைப்பகுதியில் விவசாயியொருவர் உழவச் சென்றபோது இச்சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு, தற்போதுள்ள வழக்கு, அரச அதிபரின் சமரச முயற்சி இவற்றையெலாம் உதாசீனம் செய்து விவசாயிகள் இவ்வாறு உழவ முயற்சிக்கின்றபோது பிரச்சினை எழுவதோடு சமாதானத்திற்கு குந்தகம் விளைகின்றது என கால்நடை பாற்பண்ணையாளர் சங்க செயலாளர் சோ. புஸ்பராசா தெரிவித்தார்.

நேற்று முன்தினம்  (01) நேற்றும்  (02) சுமார் 08 உழவு இயந்திரங்கள் உழவ சென்றதையடுத்து மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய பொலிசார் வனபரிபாலன இலாகா பார்வையாளராக இருப்பதையிட்டு கால்நடை பாற்பண்ணையாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

சுமார் 25 ஆயிரம் காலந்டைகளுக்கான 4,000 ஏக்கர் வட்டமடு மேய்ச்சல்தரை அடிக்கடி இவ்விதம் பிரச்சினைக்குரிய பூமியாக மாறிவருகின்றது.

இதுவிடயம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.