மருத்துவ துறைக்கு கல்லடி விவேகானந்த மகளீர் வித்தியாலயத்திலிருந்து மூவர் தெரிவு

க.விஜயரெத்தினம் ) மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட  கல்லடி  விவேகானந்தா மகளிர் மகாவித்தியாலயத்தில் அண்மையில் வெளியான  (2016 )க.பொ.த (உ/த) பரீட்சைபெறுபேறுகளின் மூலம்  31 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளதாக அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த வருடம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 3 மாணவிகள் மருத்துவத்துறைக்கு  தெரிவுசெய்யப்பட்டு பாடசாலைக்கு புகழை ஈட்டித்தந்துள்ளார்கள்.இது மெச்சத் தக்கவிடயமாகும். இக் கல்லூரியின்  106 வருடவரலாற்றில் இவ்வருடமே 03 மாணவர்கள் மருத்துவத் துறைக்குசெல்வது குறிப்பிடத்தக்கதாகும். செல்வி.சிவரஞ்சன் சிவாஞ்சலி (மாவட்டநிலை 03),செல்வி.மயில்வாகனம் பிரியங்கரி (மாவட்டநிலை 09), இராஜபாரதிசஞ்சிதா (மாவட்டநிலை 28) இவற்றில்  சிவாஞ்சலி அதிவிசேடசிறப்பாகத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

இதனைவிட பௌதீகஉயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 09மாணவிகளும் ,வர்த்தகப்பிரிவில் 06 மாணவிகளும் கலைப்பிரிவில் 13 மாணவிகளும் பல்கலைக்கழகம் செல்லவுள்ளார்கள். இம் மாணவிகளையும், கற்பித்த ஆசிரியர்களையும், அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் அவர்களும் ,பிரதிஅதிபர்களும், ஆசிரியர்களும், பாடசாலை அபிவிருத்திக் சங்கம் ,ஆகியோர்கள் நேற்று (9.1.2017) திங்கட்கிழமை  பாராட்டி கௌரவித்தார்கள்.