புளுகுணாவை குளத்தின் நீர்மட்டம் 2.5அடி உயரத்திற்கு அதிகரிப்பு

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றும், இன்றுமாக பெய்துகொண்டிருக்கும் மழை காரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட புளுகுணாவை குளத்தில் 2.5அடி நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசன புளுகுணாவை பிரிவு தொழிநுட்ப உத்தியோகத்தர் தி.மதியழகன் குறிப்பிட்டார்.

பருவமழையின்மையால்; குளங்கள் வற்றி,நீர்மட்டமும் குறைவடைந்து காணப்பட்டது. இந்நிலையில் புளுகுணாவை குளத்தில் 10அடி உயரத்திற்கு நீர்மட்டம் இருந்தது. இரு நாட்களாக மழை பெய்து வருதினால், ஞாயிற்றுக்கிழமை 10மணிவரையான காலப்பகுதியில் 2.5அடி நீர்மட்டம் மேலதிகமாக உயர்ந்து தற்போது 12.5அடி உயரத்திற்கு குளத்தின் நீர்மட்டம் உள்ளதாகவும்; மேலும் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக இம்மழை பெய்யுமிடத்து எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு இடையில் குளங்கள் நிரம்பி வான்போடுவதற்கு சாத்தியமுள்ளதாகவும் மேலும் கூறினார்.