மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் பாரம்பரிய தைப்பொங்கல் விழா

மட்டக்களப்பு  நகரில் முதன் முதலாக இந்துப் பண்டிகைகளுள் ஒன்றான "பாரம்பரிய தைப்பொங்கல் விழா-2017" மெதடிஸ்த மத்திய கல்லூரி வளாகத்தில் இன்று  ஞாயிற்றுக்கிழமை (15.1.2017) பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில்  நடைபெற்றது.



மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக பண்பாட்டு ஊர்வலம்  காலை 8.00 மணிக்கு கோட்டைமுனை – வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி மெதடிஸ்த மத்திய மத்திய கல்லூரி வளாகத்தை சென்றடைந்தது.

பண்பாட்டு ஊர்வலத்தில் பொங்கல் பொருட்களை சுமந்த மாட்டு வண்டில் பவனி, உழவர் நடனம், கோலாட்டம் மற்றும் இன்னியம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய பண்பாட்டு இசை முழக்கம் இடம்பெற்றது.இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும்,தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரருமான கி.துரைராசசிங்கம்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார் ,ஞா.கிருஸ்ணப்பிள்ளை ,இரா.துரைரெட்ணம் ,மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.கிரிதரன் ,மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன், வர்த்தகர்  பீ.செல்வராசா ,கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சுகுமாரன் ,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய அதிகாரி நவரெட்ணம் மௌலீசன், அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் ,பிரதியதிபர் இ.பாஸ்கர், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் டீ.பி.பிரகாஸ்,பழைய மாணவசங்க தலைவர் எஸ்.சசிகரன்,பொறியியலாளர் வை.கோபிநாத் உட்பட, பழைய மாணவ சங்கத்தினர்,ஆசிரியர்கள், பெற்றோர்கள்,மாணவர்கள்,சாரண மாணவர்கள்,  கலந்து கொண்டார்கள்.

இதன்போது ஏழு வகையான பொங்கல் அதிகளால் சைவசமய பாரம்பரியத்துடன் பொங்கல் பொங்கப்பட்டது.17 வகையான பட்சணம் தயாரிக்கப்பட்டு விருந்தினர்களுக்கு ருசிக்க கொடுக்கப்பட்டது.

பாடசாலை வளாகத்தில் மாணவர்களின் நுண்ணறிவை வெளிப்படுத்தும் போட்டிகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் திறன்களை வெளிப்படுத்தும் போட்டிகள், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், குடும்பத்தினருக்கான கருத்தாடல், கோலாட்டம், நாட்டார் பாடல்கள், வில்லுப்பாட்டு, நாடகம், பேச்சு, காவியம் பாடுதல். கவியரங்கம், மற்றும் கலாசார நடனம் என்பன நடைபெற்றது.