மாகாணத்திலுள்ள பிரச்சிணையை ஒன்று திரட்டி ஒரு எழுச்சிப் பேரணியை உருவாக்கயிருக்கிறோம்- எஸ்.வியாழேந்திரன்

(சுபஜன்)
இன்று (23) செங்கலடி விவேகானந்தா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் உரையாற்றுகையில்.
மாகாணத்திலுள்ள பிரச்சினையை ஒன்று திரட்டி ஒரு எழுச்சிப் பேரணியை உருவாக்கியிருக்கிறோம். இதனுடைய நோக்கம் நாம் எந்த விதமான தீர்வுத்திட்டத்தையும் குழப்புவது அல்ல வரும் 3ம் மாதம் ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரிலே எங்களுடைய பிரச்சினைகள் வருகின்ற போது அதற்கான ஒரு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் சர்வதேச ரீதியாக சரிவதேசத்தின் பார்வையை இந்த அரசாங்கத்தின் மீது செலுத்தி எங்கள் மக்களுக்கு ஒரு தர்க்கதீர்வை பெற்றுத்தருவதற்கு சர்வதேசம் முன்வர வேண்டும் என்பதற்கான ஒரு அழுத்தத்தை கொடுப்பதற்கான ஒரு எழிச்சிப் பேரணியை செய்யவிருக்கிறோம்.
இன்று சிலர்  கூறுக்கின்றார்கள் இந்த எழிச்சிப்பேரணி உண்மையிலே தீர்வுத்திட்டத்தை குழப்புகின்ற செயற்பாடு என்று அவ்வாறு பார்த்தால் இன்று மக்களாக வீதிக்கு இறங்கி ஆங்காங்கே போராட்டங்களை நடாத்துகின்றார்கள் அந்த போராட்டத்தை தீர்வுகளை குழப்புகின்ற விடயமா இல்லை ஆகவே மக்களாக முன்வந்து இன்று வீதியில் போராடுகின்ற நிலை உருவாகியுள்ளது. அந்த நிலையிலே எங்கள் மக்கள் எல்லோரையும் ஒன்று சேர்த்து வருகின்ற 3ம் மாதம் நடைபெற இருக்கின்ற ஐக்கிய நாடுகள் உரிமைகள் பற்றிய கூட்டத்தொடரிலே சர்வதேசத்தின் பார்வையை இலங்கை மீது திருப்பி இங்கு பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு சரியான ஒரு தீர்வை பெற்றுக்கொடுக்க ஒரு அழுத்தத்தை பெற்றுக்கொடுக்க நாம் முனைந்திருக்கிறோம் அதனுடைய கட்டமாகவே இந்த எழிச்சிப் பேரணி அமைந்திருக்கின்றது. என பா.உ உரையாற்றினார்

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
2009 ம் ஆண்டு குறிப்பாக தமிழர்களின் போராட்டம் ஆரம்பத்தில் அஹிம்சையில்தான் ஆரம்பித்தது. பின் தழிழர்கள் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கி போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள் 3 தசாப்த காலமாக இலங்கை தேசத்திலே நாங்கள் எங்கள் உரிமைக்காக எங்களுக்கு உரித்தான நீதி நியாயத்திற்காக எங்களுடைய இளைஞர்கள் ஆயுதம் தூக்கி போராடினார்கள்.
இந்த யுத்தம் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலிலே மௌனிக்கப்பட்டது. யுத்தின் பின் தற்போது அரசியல் ரீதியாக ஜனனாயக ரீதியாக எங்களுடைய மக்களுக்கு தேவையான நியாயமான நீதியான உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராடுகிறோம்.
2009 ம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்பு இந்த நாட்டிலே கௌதம புத்தருக்கு அடுத்ததாக பார்க்கப்பட்டவர் மகிந்தராஜபக்ஷ அவர்கள் மகிந்தராஜபக்ஷ அவர்கள் 2009 ஆம் ஆண்டு தாம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததன் வெற்றிக்களிப்பில் இருந்த போது அவருக்கு ஒரு சந்தர்ப்பம் இருந்தது வேகமான முறையிலே இந்த நாட்டினுடைய சிறுபான்மை மக்களுக்குரிய தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டிய ஒரு கடைப்பாடு இருந்தது ஆனால் 2009, 2010,2011 ஆகிய வருடங்களில் இந்த நாட்டினுடைய சிறுபான்மை மக்களுக்குரிய உரிமையை அவர் பெற்றுக்கொடுக்கவில்லை.
இதனால் நாட்டிலே மதவாத அமைபுக்களும், இனவாத அமைப்புக்களும் தலைதூக்கியது. முன்னால் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ அவர்கள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த அந்த சந்தர்ப்பத்திலே அதாவது 2009 யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த அந்த காலகட்டத்திலே அவர் மக்களுக்கான தீர்வைக் கொடுத்திருக்கலாம் அப்படி அவர் தீர்வைக்கொடுத்திருந்தால் இந்த நாட்டைக் குழப்புவதற்கு எந்த விதமான மதவாத, இனவாத அமைப்புக்களும் முன்வந்திருக்காது அவர் இழுத்தடித்து இழுத்தடித்து சென்றதால்தான் நாட்டிலே சிறுபான்மை மக்களுக்கான தீர்வை கொடுப்பதிலே இனவாத, மதவாத அமைப்புக்கள் தீவிரமாக செயற்பட ஆரம்பித்தது அவரும் அதற்காக சாதகமாகத்தான் செயற்பட்டார்.  2015ம் ஆண்டு இந்த நாட்டின் இனவாதத்தையும் மதவாதத்தையும் விரும்பாத பெரும்பான்மை மக்களும் இந்த நாட்டினுடைய தமிழ் பேசுகின்ற சிறுபான்மை மக்களும் இணைந்து ஒரு புதிய ஜனாதிபதியைக் கொண்டு வந்தார்கள்.; 2015.01.08 ம் திகதி இந்த நாட்டின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன அவர்கள் பதவியேற்றார். 2015 ம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதியாக கொண்டுவருவதற்கு பொரும் பங்களிப்பு செய்தவர்கள் எங்களுடைய தமிழ் மக்கள் அவர் பெரும்பான்மை மக்களான சிங்கள மக்கள் மத்தியிலே சராசரியான ஆதரவைத்தான் பெற்றிருந்தார் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற வடக்கு கிழக்கில்தான் மைத்திரிபால சிறிசேன அவர்கள் அதிகளவான வாக்குகளைப்பெற்றார். குறிப்பாக தமிழர் வாழ்கின்ற பிரதேசத்திலேயேதான் அதிக 70 வீதம் 80 வீதமான வாக்குகளைப்பெற்று இந்த நாட்டின் ஜனாதிபதியாக வந்தார். மகிந்தராஜபக்க தீர்வை மக்களுக்கு வழங்கக்கூடிய சந்தர்ப்பம் இருந்தும் அவர் அதை தவறவிட்டார்.
மைத்திபால சிறிசேன அவர்கள் மக்களுக்கான தீர்வை வழங்குவதற்கான சந்தர்ப்பம் 2015 ல் இருந்தது அதை அவர் சரியாக வழங்கவில்லை 2016ல் இருந்தது அதிலும் வழங்கப்படவில்லை தற்போது 2017 சென்றுகொண்டிருக்கின்றது.  இ;ந்த நாட்டினுடைய சிறுபான்மை மக்கள் இந்த அரசை ஏற்படுத்தியதற்கு அரசியல் தீர்வுக்கு முன்பு பல காரணங்கள் இருந்தது அதாவது அரசியல் கைதிகள் சிறைச்சாலையில் இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிககள் விடுதலை செய்யப்பட வேண்டும் அடுத்து முன்னைய அரசாங்கத்தில் புனர்வாழ்வழிக்கப்பட்ட பதினொராயிரத்து தொள்ளாயிரத்திற்கு  அதிகமானோருக்கு வாழ்வாதார திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் மற்றும் பொலிஸ் நிலையங்களாகவும் இரானுவ முகாம்களாகவும் இருக்கின்ற எங்களுடைய தமிழர்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் காணாமல் போனோர், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சரியான நீதி கிடைக்கப்பட வேண்டும் இவ்வாறு பல்வேறுபட்ட எதிர்பார்ப்போடுதான் இந்த நல்லாட்சியை இந்த மக்கள் கொண்டுவந்தார்கள் அந்த எதிர்பார்ப்புக்கள் முழுமையாக இன்னும் நிரைவேற்றப்படவில்லை.
என்ன எதிர்பார்ப்பிலே இந்த நல்லாட்சியை கொண்டு வந்தார்களோ அந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படாதது ஒரு பக்கமிருக்க புதிய புதிய பிரச்சிணைக்ள் எமது வடக்கு கிழக்கு தாயகத்திலே ஏற்படுகிறது. ஆங்காங்கே சிங்கள மக்கள் பூர்வீகமாக வாழாத தழிழ் மக்கள் வாழுகின்ற இடங்களிலே திடீர் திடீரென விகாரைகள், புத்தர் சிலைகள் அது மாத்திரமல்ல வட கிழக்கு தேசத்திலே அத்துமீறிய குடியேற்றங்கள் , காணி அபகரிப்பு முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஏற்கனவே எங்கள் மக்கள் எதிர்பார்த எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாதது ஒருபக்கம் அதே வேளை புதிது புதிதாக எத்தனையோ பிரச்சினைகள் இங்கே முளைக்கிறது இந்த ஒரு சூழலிலே இந்த ஆட்சியை இந்த நாட்டின் ஜனாதிபதியை இந்த நாட்டின் பிரதமரை நம்புகிறோம் ஆனால் அந்த நம்பிக்கையை கூட தொடர்ச்சியால் நீடிக்க முடியாது. 2017 ஆரம்பத்தில் அல்லது நடுப்பகுதியிலாவது இந்த அரசு எமது மக்களுக்கான தீர்வை வழங்க வேண்டும் ஆனால் கால இழுத்தடிப்பை பார்க்கும் போது சரியான தீர்வுத்திட்டம் கிடைக்குமா என்ற ஐயப்பாடு எம்மிடையே காணப்படுகிறது எங்கள் மத்தியில் ஒரு அதிர்ப்தி நிலை காணப்படுகிறது இந்த நேரத்தில்தான் நாம் இப்போது ஒரு எழுச்சிப் பேரணியை ஒழுங்குசெய்திருக்கிறோம் வரும் 10 ம் திகதி ஒரு பாரிய எழிச்சிப் பேரணியை கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தயிருக்கிறோம். குறிப்பபாக ஜனவரி மாதம் இந்ந மாதமே எங்கள் மக்கள் வீதியில் வந்து போராடுகின்றார்கள் பாடசாலை மாணவர்கள் தங்களுடைய பாடசாலைக் காணியை தருமாறு வீதியில் இருந்து போராடுகின்றார்கள் மட்டக்களப்பை எடுத்துக்கொண்டால் முறகொட்டான்சேனையிலே மயிலம்பாவெளியிலே, சவுக்கடியிலே தளவாயிலென எங்களுடைய மக்கள் காணி அபரிப்பு காரணமாக தங்களுக்குரிய காணியை தரக்கோரி போராடுகின்றனர் என்றும் தொடர்ந்து உரையாற்றினார்.