வெல்லாவெளி ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில்; தைப்பொங்கல் விழாவும் மழை வேண்டி பிரார்த்தனையும்

(எஸ்.நவா)

வெல்லாவெளி போரதீவுப்பற்று பிரதேச செயலகமும் பிரதேசமக்களும் இணைந்து நடாத்திய மாபெரும் தைப்பொங்கல் விழாவும் மழைவேண்டி பிராத்தனையும் இன்று வெல்லாவெளி ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் 100 மேற்பட்ட பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

கலாச்சார உத்தியோகத்தர் அவர்களின் நெறிப்படுத்தலின் ஊடாக இந் நிகழ்வு இடம்பெற்றது பிரதேச செயலாளர் தனது உரையில்  தற்பொழுது வறட்சியான காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ள இந்த நிலையில் மழை வேண்டியும் தைப்பொங்கல் விழாவினையும் இணைத்து பிரதேச செயலகமும்  பிரதேச மக்களும் இந்த பொங்கல் விழாவினை கலாச்சார பாரம்பரிய முறைக்கேற்ப விசேட வழிபாடுகளுடனும் மழைக்காவியங்களும் பாடப்பட்டும் செய்யப்பட்டதையிட்டு மகிழ்சியடைவதாகவும் கூறினார்  இந் நிகழ்வுக்கு பிரதேச செயலாளர் உற்பட பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் ஆலய நிர்வாகம் சங்கங்கள் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்; என்பது குறிப்பிடத்தக்கது.