தமிழ் மக்களின் விடுதலைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் : கலையரசன்)


(சா.நடனசபேசன்)
முப்பது வருடமாக தமிழ் இனத்தின் விடுதலைக்காக போரடிக்கொண்டு இருக்கின்றோம் அந்த விடுதலை கிடைக்கும் வரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கும்
 கடந்தகாலங்களில்  மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கம் தமிழ்மக்களை ஏமாற்றிவந்துள்ளார்களே தவிர தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதற்கான எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை என கிழக்குமாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்
2017 ஆண்டுக்கு தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள்வித்தியாலயத்தில் அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் 11 ஆம் திகதி புதன்கிழமை காலை இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்


இந்நிகழ்வில் நாவிதன்வெளிக்கோட்டக் கல்விப்பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து கிராம அபிவிரத்திச்சங்கத்தின் தலைவர் யோகராசா வேப்பையடிபிள்ளையார் ஆலயத்தின் தலைவர் ஆசிரியர் மா.தருமலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்
அவர்மேலும் பேசுகையில் கடந் ஆட்சியில் இருந்த அரசாங்கம் தமிழர்களுக்கான தீர்வு விடயத்திலே கரிசனைகாட்டவில்லை தமிழ்மக்களை கொடுமைப்படுத்தியமையால் ஆட்சியினை மாற்றி நல்லாட்சி அரசாங்கத்தை மாற்றியமைத்தும் இன்னும் நல்லாட்சி அரசாங்கம் தமிழர்களுக்கான தீர்வினை வழங்காமல் இருப்பது வேதனையான விடயமாகு
தமிழ் மக்கள்  புதிய அரசியல் அமைப்பினூடாக வடகிழக்கு இணைந்த புதிய அரசியல் தீர்வை எதிர்பார்த்தவர்களாக இருக்கின்றோம் இத்தீர்வினைப் பெறுவதற்காக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அவதானமாக செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றது

வடகிழக்குப் பிரதெசங்களில் ஆய்வொன்று செய்யப்பட்டு இருக்கின்றது அந்த ஆய்வின் அடிப்படையில் இற்றைக்கு 30 வருடங்களுக்கு முன்னர் வடகிழக்குப் பிரதேசத்தில் கல்வியின் அடைவ உச்சநிலையில் இருந்ததாகவும் அது இன்று பின்தள்ளப்பட்டு இருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது  .இந்தநிலையினை மாற்றி எமது சமூகத்தின் கல்வியினை முன்னேற்றவெண்டும் அதற்காக நாம் அனைவரும் முன்னின்று உழைக்கவேண்டும்

அம்பாரைமாவட்டத் தமிழ்பிரதேசங்கள் பலவழிகளாலும் பாதிக்கப்பட்டு வருகின்றது அதாவது அத்துமீறிய குடியேற்றம்இ தொழில் வழங்கும் விடயங்கள் இவளப் பகீர்வுகள் போன்ற விடயத்தில் புறக்கணிக்கப்பட்ட வண்ணம் உள்ளோம் இந்நிலை இடம்பெறக்கூடாது கடந்தகாலங்களில் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும் தமிழர்கள் இன்று நல்லாட்சி அரசாங்கம் மலர்ந்துள்ளபோதும் மீண்டும் தமிழர்கள் பாதிக்கப்படுவது எந்தவிதத்தில் நியாயம்.அதேவேளை இந்நிகழ்வின் போது தரம் 1மாணவர்களுக்கு த.லோகேஸ்வரன் அவர்களின் சொந்த நிதியில் புத்தகப்பைகளும் வழங்கிவைக்கப்பட்டது