உள்ளூராட்சி மன்றங்களுக்கு புகைவிசுறும் கருவி வழங்கிவைத்த முதலமைச்சர்

கிழக்கு மாகாண முதலமைச்சரினால் ஏறாவூர் நகர் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கு புகை விசுறும் கருவி நேற்று மாலை ஏறாவூர் நகர சபையில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.

டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்திருப்பதனாலும், ஏற்கனவே கையிருப்பில் இருக்கும் புகை விசிறும் இயந்திரங்கள் வலுவிழந்து காணப்படுகின்றமையினாலும் உடனடியாக இரண்டு புகை விசிறும் இயந்திரங்களைத் தங்களுக்கு தந்து ஏறாவூர் பிரதேசத்தில் டெங்கு நோய் பரவலைத் தடுக்க உதவுமாறு ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் முதலமைச்சருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய கௌரவ கிழக்குமாகாண முதலமைச்சர் அல்ஹாஜ் அல்ஹாபிழ் நசீர் அஹமட் அவர்களினால் ரூபா 450000 பெறுமதியான இரண்டு புகை விசிறும் இயந்திரங்கள் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர். திருமதி கலையரசி துரைராசசிங்கம் அவர்கள் சார்பாக பொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர்களான MHM.மசூத் மற்றும் AL.முஹைதீன் ஆகியோர்களிடம் நேற்று பிற்பகல் ஏறாவூர் நகரசபையில் வைத்து கையளிக்கப்பட்டது.


ஏறாவூர் நகரசபைச் செயலாளர் எச். எம்.எம்.ஹமீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
கிழககு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கலந்து கொண்டு இதனை வழங்கிவைத்தார்.