கோட்டைமுனை அருள்மிகு அரசடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்திற்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு


(சிவம்)
மட்டக்களப்பு மாநகர பொதுச் சந்தைக்கு அருகாமையில் அமைந்துள்ள கோட்டைமுனை அருள்மிகு அரசடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை (31) கொடியேற்றத்துடன் ஆரம்பமாவதை முன்னிட்டு கொடிச்சேலை எடுக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (30) மாலை இடம்பெற்றது.

தாமரைக்கேணி செங்குந்தர் உபயமாக வழங்கப்படும் கொடிச்சீலை மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து நகர வீதிகளினூடாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

கொடியேற்றப் பூஜை (31-01.2017) அமரர் கே.கே. சண்முகம் குடும்பம், இரண்டாம் நாள் (01.02.2017) எஸ்.ராஜ்மோகன் குடும்பம், மூன்றாம் நாள் இந்து வர்த்தகர்கள் (02), நான்காம் நாள் (03) அமரர் கனகரத்தினம் குடும்பம், ஐந்தாம் நாள் (04) அமரர் ரி. சீவரெத்தினம் குடும்பம், ஆறாம் நாள் (05) எஸ்.அமிர்தலிங்கம் குடும்பம், ஏழாம் நாள் (06) சண்முகம் சிவபாதசுந்தரம் - வேல்முருகன் ஸ்டோர்ஸ், எட்டாம் நாள் (07) செ. தர்மரட்ணம் குடும்பம், உபயமாகவும், ஒன்பதாம் நாள் (08) ஆறாம் வட்டாரப் பொது மக்கள், பத்தாம் நாள் (09) காலை தீர்த்ததோற்சவம் சி. குமாரகுலசிங்கம் குடும்பம், மதியம் மகேஸ்வர பூஜை மற்றும் அன்னதானம் ஆலய பரிபாலன சபையம் பொது மக்களும் உபயமாக இடம்பெறுவதோடு

13 ஆம் நாள் (12) மாலை வைரவர் பூஜை எம். ரவீந்திரன் குடும்பத்தினர் உபயமாக இடம்பெறுவதோடு ஆலய வருடாந்த மஹோற்சவம் நிறைவு பெறும்.

மஹோற்சவக் குரு சிவஸ்ரீ க . கு. சச்சிதானந்த சிவம் குருக்கள், ஆலய பிரதம குரு சிவஸ்ரீ எஸ்.ராமதாஸ் குருக்கள் தலைமையில் இடம்பெறும்.