மட்டக்களப்பு மாவட்டத்தில் கலைத்துறையில் ஆரையம்பதி சேர்ந்த சந்திரகுமார் சர்மிலா முதலிடம்

( சசி , எம்.எஸ்.எம்.நூர்தீன்)

இன்று (7.1.2017) காலை வெளியான கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் முடிவுகளின் படி மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் கலைப்பிரிவில் ஆரையம்பதி கல்விக் கோட்டத்திலுள்ள ஆரையம்பதி ராமகிருஸ்ன மிஸன் பாடசாலையைச்  சேர்ந்த சந்திரகுமார் சர்மிளா எனும் மாணவி மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தினை பெற்றுள்ளார்.

இந்த மாணவி ஆரையம்பதி தெற்கு குடியேற்ற வீதியில் வசித்து வருகின்றார்.


மேற்படி மாணவி சரத் குமார் அவர்களின் புதல்வி என்பதும் இவர் ஒரு மேஸன் கூலித் தொழிலாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மாணவின் தந்தை சரத்குமார் கருத்து தெரிவிக்கையில் நான் கூலித் தொழில் செய்து எனது மகளை படிப்பத்துள்ளேன். எனது மகள் இந்த பெறுபேற்றை எடுத்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.

ஆரையம்பதி பிரசேத்திற்கும் எனது மகள் பெருமை சேர்த்துள்ளமை எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது. என்ன கஸ்டப்பட்டாவது பிள்ளைகளை படிப்பிக்க வேண்டும்.

வறுமையிலும் எனது பிள்ளையை படிப்பித்துள்ளேன்.  எனது மகள் மேலும் முன்னேற வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் எனது மகளின் கல்விக்குதவியவர் என்பதையும் இங்கு கூறி வைக்க விரும்புகின்றேன் என்றார்.