தம்மால் மேற்கொள்ளப்பட்ட ஊடக பயிற்சி, செயற்றிட்டம் தொடர்பான முன்னேற்றம் பற்றி ஐரோப்பிய ஒன்றிய திட்டக் கண்காணிப்பு பிரதிநிதி ஆராய்வு


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களின் எதிர்கால வளர்ச்சியை நோக்காக கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டம் மற்றும் பயிற்சி நெறிகள் தொடர்பிலும் அதன் பயன்கள் தொடர்பிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின்   திட்டக் கண்காணிப்பாளர் திருமதி புனவ்சா குலாகோவா கேட்டறிந்துகொண்டார்.

கடந்த ஆண்டில் மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு இலங்கையின் ஊடகம் தொடர்பான சட்டம், ஊடக ஒழுக்கநெறி, ஊடக உரிமைகளும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் ஊடக உரிமைகளுடன் தொடர்பான சர்வதேச கோட்பாடுகள்  உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களை மேம்படுத்தும் செயற்றிட்டம் சொன்ட்  மற்றும் அக்டட் நிறுவனங்களினால் நடாத்தப்பட்டது.

இத் திட்டம் தொடர்பில் பயிற்சிநெறியில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் தற்போது அதன் மூலம் நன்மை அடைந்துள்ளார்களா என்பது பற்றி கேட்டறிவதற்காக திட்டக் கண்காணிப்பாளர் திருமதி புனவ்ஸா குலாகோவா  கடந்த சனிக்கிழமை 21ஆம் திகதி ஊடகவியலாளர்களை சந்தித்து பயிற்சி தொடர்பில் கருத்துக்களை கேட்டறிந்தார்.

இதன்போது , ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், உதவிகள், தேவைகள் பற்றியும் அங்கு ஊடகவியலாளர்களால் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது சொன்ட்  மற்றும் அக்டட் நிறுவனங்களினால் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.