அம்பாறை பிராந்திய சுகாதார அபிவிருத்தி தொடர்பாக அமைச்சர் நஸீர் கலந்துரையாடல்

(அபு அலா, சப்னி அஹமட்)

அம்பாறை மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களை இன்று (23) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ,எல்.முஹம்மட் நஸீர் தலைமையிலான குழு விஜயமொன்றை மேற்கொண்டு பார்வையிட்டனர்.

இதன் பின் அங்குள்ள பணிப்பாளர்களுடனும், வைத்திய அதிகாரிகளுடனும் அம்பாறை பிராந்தியத்தில் மேற்கொள்ளவுள்ள சுகாதார அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும், அங்குள்ள வைத்தியர் பிரச்சினைகள், ஆளனிப்பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.


இதன்போது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான மஞ்சுல பெணாண்டோ, மெத்தான்ந்த டி சில்வா, அம்பாறை மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் திலக் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.