பெரியகல்லாற்றில் விபத்து - ஒன்பது பேர் காயம்

(விஜயரெத்தினம் ) களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பெரியகல்லாற்றில் நேற்று  (15.1.2017) பிற்பகல் 3.15 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒன்பது (9) பேர் மிகவும் கடுமையான படுகாயங்களுடன் கல்லாறு மாவட்ட வைத்தியசாலை,களுவாஞ்சிகுடி ஆதார  வைத்தியசாலைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.கல்முனை - மட்டக்களப்பு நெடுஞ்சாலையில்  பெரியகல்லாறு கிராமத்தில் பிரதான வீதியில்  மெதடிஸ்த தேவாலயத்தில் முன்பாக இடம்பெற்ற விபத்திலே மட்டக்களப்பு தாழங்குடாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்கள்.இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றது.தலை,நெஞ்சு,இடுப்பு பகுதி பலமாக அடிக்கப்பட்டு கடுமையான இரத்தக் கறைகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள்.மினிரக வாகனத்தில் தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு அக்கறைப்பற்றில் உள்ள உறவினர் வீட்டுக்கு புறப்படுகையிலே பெரியகல்லாற்றில் வாகனத்தின் பின் டயரில் அதிகமான வெப்பம் காரணமாக டயர் உடைப்பு எடுத்துள்ளது.இதனால் வாகனம் நீண்ட தூரம் இழுத்தடிக்கப்பட்டு தடம் புரண்டுள்ளது.சிறுவர்கள் தெய்வாதினமாக பொலிசாரின் பங்களிப்புடன் காப்பாற்றப் பட்டுள்ளார்கள்.இவ்விடத்திற்கு களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிசார் விரைந்து வந்து சட்டநடவடிக்கை மேற்கொண்டார்கள்.விபத்தில் சிக்குண்டு அடிபட்ட வாகனம் போக்குவரத்து பொலிசாரால் மீட்கப்பட்டு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.