'விடுதி மாணவர்களை வெளியேற்றுவதை நிறுத்து' மட்டக்களப்பு நகரெங்கும் சுவரொட்டிகள்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பிரதான நிர்வாகக் கட்டிடத் தொகுதியில் கடந்த சில தினங்களுக்கு மேலாக ஆக்கிரமிப்பு ரீதியில் அமர்ந்;திருக்கும் மாணவர்களின் விடயங்கள் சம்பந்தமாக கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பேரவை 20.01.2017 அன்று பி.ப 4.30 மணியளவில் நடைபெற்ற அதன் விசேட கூட்டத்தில் எல்லா வருடத்தை சேர்ந்த அனைத்து பீட மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் 20.01.2017 இலிருந்து இடைநிறுத்தப்படுவதாகவும்,
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் வந்தாறுமூலை வளாகம் மற்றும் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட வளாகம்; ஆகியன 21.01.2017 காலை 8.00 மணியிலிருந்து மாணவர்களுக்கு உட்புக விலக்களிக்கப்பட்ட இடங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறி;வித்திருந்தது.


இந்த அறிவித்தலை அடுத்து ஞாயிற்றுக்கிழமை (22.01.2017) மட்டக்களப்பு வந்தாறுமூலை, ஏறாவூர் உள்ளிட்ட நகரெங்கும் கிழக்குப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் எனக்குறிப்பிட்டு சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

அதில், 'விடுதி மாணவர்களை வெளியேற்றுவதை நிறுத்து, சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுதி வசதிகளைப் பெற்றுக் கொடு' என்ற வாசகங்களைத் தாங்கிய சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.