ஜனாதிபதி பதவியேற்று இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு திருமலையில் கிழக்கு மாகாணத்தின் சர்வமத அனுஷ்டானங்கள்

(ஷமி.மண்டூர்)  இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பதவியேற்று இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டும் மழை வேண்டியும் மாகாண மட்ட சிறப்பு வழிபாடுகள் கடந்த 08 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நிலைபேறான யுகத்தின் மூன்றாவது ஆண்டு மலர்வு எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ அவர்களின் பங்கேற்புடன் திருகோணமலையில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் தினைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் ஏற்பாட்டில் காலை திருக்கோணேஸ்வரர் தேவஸ்தானத்தில் இந்து மத பிரார்த்தனைகளும் பெரியகடை புனித மரியாள் தேவாலயத்தில் திருமலை பேராயர் தலைமையில் கிறிஸ்தவ மத வழிபாடுகளும், மதியம் முகைதீன் ஜும்மா மஸ்ஜீத் பள்ளிவாயலில் இஸ்லாமிய மத வழிபாடுகளும், மாலை உப்புவெளி தர்ம விஜய விகாரையில் பௌத்தமத போதிபூஜை சிறப்பு வழிபாடும் இடம்பெற்றது. 

கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ இஸட்.ஏ. நஸீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் கௌரவ.எஸ்.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கௌரவ.கி.துரைராஜசிங்கம் மற்றும் ஆளுனரின் செயலாளர் திருமதி ஜே.ஜே முரளிதரன், விவசாய அமைச்சின் செயலாளர் திரு.கே.சிவநாதன் மற்றும் பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) ஏ.எச்எம். அன்சார் உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள், பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினதும், கிழக்கு மாகாண திணைக்களங்களினதும் அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு விஷேட வழிபாடுகளில் ஈடுபட்டனர்.