மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஆணையாளராக தமிழர் ஒருவர் நியமனம் - துரிதமாக செயற்பட்டவர்களுக்கு துரைரெட்ணம் நன்றி தெரிவிப்பு

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஆணையாளராக தமிழ் இனத்தினை சேர்ந்த இலங்கை நிருவாக சேவை வகுப்பு 1ஐ  உடைய முன்னாள் பிரதேச செயலாளர் தவராசா நியமிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் இன்று குறிப்பிட்டார்.

குறித்த மாநகர சபையின் ஆணையாளராக கடமையாற்றியவர், பதவியுயர்வு பெற்று சென்றதை அடுத்து, குறித்த இடத்திற்கு சகோதர இனத்தினை சேர்ந்த முஸ்லீம் ஒருவர் நியமிக்கப்பட்டார்.  எனினும் குறித்த சபையின் ஆணையாளராக இதுவரை சம்பிரதாய முறையிலும், பழமை போற்றும் வகையிலும், 99வீ தமான மக்கள் தமிழர்கள் இருக்கின்றமையினாலும் தமிழர் ஒருவரே குறித்த பதவிக்கு நியமிக்க வேண்டும் என,  நானும், ஏனைய மாகாண அமைச;சர்களும் ஆளுனருடனும், பிரதம செயலாளரிடமும் முறையிட்டத்தை தொடர்ந்து, கடந்த 17ம் திகதி  அவ் இடமாற்றம் இரத்து செய்யப்பட்டு, புதிய ஆணையாளராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர், பிரதம செயலாளர் அலுவலகங்கள் ஊடாக அறியக்கிடைத்துள்ளது.


குறித்த இடமாற்றத்தினை மேற்கொள்வதற்காக, துரிதமாக நடவடிக்கை எடுத்த ஆளுநருக்கும், ஆளுநரின் செயலாளருக்கும், பிரதம செயலாளருக்கும், ஏனைய மாகாண அமைச;சர்களுக்கும், இதில் வேறு யாரும் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் , நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் குறித்த மாநகர சபையின் ஆணையாளராக கடமையாற்றி பதவி உயர்வு பெற்றுசென்றுள்ள , உதயகுமார் சிறந்த  சேவையாற்றி இருந்தார். அதற்காக அவருக்கும் எனது சார்பாகவும், மக்கள் சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எனவும் மேலும் தெரிவித்தார். 

தற்போது ஆணையாளராக நியமிக்கப்படடவர்  திங்கட்கிழமை கடமைகளை பொறுப்பேற்பார் என தெரியவருவதாகவும் குறிப்பிட்டார்.