சுவீஸ் நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல்விழா

(சா.நடனசபேசன்)
புலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் இலங்கையின் கிழக்கு மாகாண மக்களை ஒன்றிணைத்து நான்காவது முறையாக மிகப் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்த'ஊரும் உறவும் பொங்கல் விழா-2017'  ஜனவரி 15ஆம் திகதி  காலை 11 மணிக்கு சுவிஸ் நாட்டின் பேர்ன் நகரில் நடைபெற்றது

தமிழ் மக்களின் பாரம்பரியம் மிக்க பெருவிழாவான பொங்கல் விழாவினைச் சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற  இவ்விழாவிற்கு லண்டன்,ஜேர்மன்,பிரான்ஸ் நாடுகளில்  வாழும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து சிறப்பித்ததுடன் இப்பொங்கல் விழா சிறப்பாக நடைபெற இலங்கையின் வடபகுதி மக்களும்  சிங்களமக்களும் கலந்து கொண்டதுடன் அவர்களுடைய பாரம்பரிய உணவுகளுடன் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்

 சுவிஸ் நாட்டின் நாலா பாகங்களிலும் செறிந்து வாழும் மக்கள் கலந்து கொண்டு சமய நிகழ்வுகளுடன் கூடிய பல்வேறான கலை கலாசார நிகழ்வுகளில் கலந்து  சிறப்பித்தனர்
இதன்போது பல்வேறான தமிழர்களின் பாரம்பரிய உணவு தயாரிக்கும் போட்டி பாரம்பரியம் மிக்க கலை கலாசாரப் போட்டிகள் போன்றன நடத்தப்பட்டமை விஷேட அம்சமாகும்

 சுவிஸ் பேர்ன் நகரில் காலை ஆரம்பமான  நிகழ்வின்போது பிரமாண்டமான முறையில் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கும் சுவாமிக்கும் படைக்கப்பட்டதன் பின்னர் பரிமாறப்பட்டது இதன்போதுஇளையராகங்கள் கரோக்கே இன்னிசை நிகழ்ச்சியும் இடம்பெற்றமை குறிப்பிடத்ததக்கது.
அதே வேளை இந்நிகழ்வுக்காக பொருளாதார உதவிகள்  மற்றும் சதுர உதவிகள் அத்தோடு சிற்றுண்டி வசதிகளைச்  மேற்கொண்ட அனைவருக்கும் வேண் ஏற்பாட்டுக்குழுவினர் நன்றிதெரிவித்துள்ளனர்.