விரைவில் களுதாவளையில் பொருளாதார மத்திய நிலையம்


(மண்டூர் ஷமி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைய இருந்த பொருளாதார மத்திய நிலையம் விரைவில் களுதாவளையில் அமைய இருப்பதாக வர்த்தக வணிகத்துறை அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகரும் பட்டிருப்பு தொகுதியின் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை(22)  தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த பொருளாதார மத்திய நிலையமென்றினை அமைப்பதற்கு அமைச்சரவையின் அங்கிகாரத்தினை கோரிய நிலையில் அதற்கான அனுமதி கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்த நிலையத்தினை களுதாவளை பிரதேத்தில் அமைப்பதன் மூலம் அப்பிரதேசத்தை அண்டிய பலகிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் விவசாய மற்றும் ஏனைய பொருட்களை உத்தரவழிக்கப்பட்ட அரச நிர்ணய விலைகளுக்கு விற்பனை செய்வதற்கு இந்த பொருளாதார மத்திய நிலையம் அமைவதாகவும். இல்லாவிட்டால் எமது மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வேறு மாவட்டங்களுக்கு அவர்கள் பல கஷ்ரங்களுக்கு மத்தில் கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டியுள்ளதாகவும். இப்படியான மத்திய நிலையங்களை எமது மாவட்டங்களில் அமையவருவதை சில தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் வாதிகள் தடைபோட்டு வருவது எமது பிரதேச அபிவிருத்திக்கு நல்லதாக இருக்காது என்றார்.

இந்த பொருளாதார மத்திய நிலையத்தினை களுதாவளை பிரதேசத்தில் அமைப்பதற்கு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களும் தனது முயறசியினாலும் இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.இதற்கான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.