நாட்டின் பல பிரதேசங்களில் மழை - முன்­னெச்­ச­ரிக்­கை­யாக இருக்­கு­மாறும் அறிவுரை


நாட்டின்   சில பகு­தி­களில்  நாளை 24ஆம் திக­தி­வ­ரை­ அ­தி­க­ள­வி­லான மழை பெய்­யக்­கூடும் என காலநிலை அவ­தான நிலையம் எதிர்வு கூறி­யுள்­ளது. இத­ன­டிப்­ப­டையில் வடக்கு, கிழக்­கு­மா­கா­ணங்­க­ளிலும் வறட்சி நில­விய பிர­தே­சங்­க­ளிலும் எதிர்­வரும் இரு  நாட்­க­ளுக்கு மழை வீழ்ச்சி கிடைக்­கப்­பெறும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.


இதற்­க­மைய 100 மில்­லி­மீற்றர் வரை­யி­லான மழை வீழ்ச்சி பதி­வாகும் எனவும் இதன்­போது இந்த பிர­தே­சங்­களில் காற்று சற்று அதி­க­ரித்து வீசக் கூடும் எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதே­வேளை, நில­விய வரட்­சி­யி­னை­ய­டுத்து நாட்டின் சில­பா­கங்­களில் தற்­போது ஓர­ளவு மழை பெய்­து­வ­ரு­கி­றது.

வடக்கு,வட­மத்­திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகா­ணங்­களில் அவ்­வப்­போது மழையோ அல்­லது இடி­யுடன் கூடிய மழையோ பெய்­யலாம். நாட்டின் ஏனை­ய­ ப­கு­தி­களில் பிற்­பகல் 2 மணிக்கு பிறகு மழையோ அல்­லது இடி­யுடன் கூடி­ய­ம­ழையோ பெய்­யலாம்.


இடி­யுடன் கூடிய மழை பெய்­கின்ற சந்­தர்ப்­பங்­களில்  பலத்­த­காற்­று­வீசக் கூடும். மின்­ன­லினால் ஏற்­படும் பாதிப்­புக்­களை குறைப்­ப­தற்­காக பொது­மக்கள் முன்­னெச்­ச­ரிக்­கை­யாக இருக்­கு­மாறும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

கடந்த 24 மணித்­தி­யா­ல­யங்­களில் மட்­டக்­க­ளப்பில் அதி­க­ள­வி­லான மழை வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளது. வாகரைப் பிர­தே­சத்தில் 94 மில்லி­மீற்றர் மழை­வீழ்ச்­சி­ அ­தி­கப்­ப­டி­யா­க­ ப­தி­வா­கி­யுள்­ளது.

இந்நிலையில் நேற்று வரையான காலப் பகுதியில் வறட்சியினால் 10 இலட்சத்து 41 ஆயிரத்து 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.