மட்டகளப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொங்கல் விழா

(  படுவான் பாலகன், சிவம், எம்.ஸ்.எம்.நூர்தீன் ) மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற 4 ஆவது பொங்கல் விழாவில் ஆரம்ப நிகழ்வாக தமிழர் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் மற்றும் வாகன ஊர்த்திகள் என்பன கல்லடிப் பாலத்திலிருந்து ஆரம்பமாகி அரசடி தேவநாயகம் மண்டபம் வரை சென்றது.


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பொன் செல்வராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்

தமித் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்டணசிங்கம், கிழக்கு மாகாண  விவசாய அமைச்சர் கே. துரைராசசிங்கம், கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரக்குமார்,  கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராசா மற்றும் ஞா.கிருஷ்ணபிள்ளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், த. கனகசபை, உள்ளிட்ட கட்சியிக் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்

மண்டப அரங்கத்தில் கலை நிகழ்வுகளான நாவற்காடு நாமகள் வித்தியாலய மாணவிகளின் வரவேற்பு நடனம், திருப்பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய மாணவிகளின் உழவர் நடனம், முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தின் நாட்டுக் கூத்து, ஆரையம்பதி இ.கி.மி. மகளிர் வித்தியாலய மாணவிகளின் நடனம், கவியரங்கு என்பன இடம்பெற்றன.

வரவேற்புரையை கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராசா, அதிதிகள் உரையில் தமித் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரின் உரையுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளையின் நன்றியுரையும் இடம்பெற்றன.