மட்டக்களப்பு அரிசி ஆலைகளிலிருந்து கலப்படம் செய்யப்பட்ட அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது

உணவுப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் நிறமூட்டிகள் கலந்த அரிசி விநியோகிக்கப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய நுகர்வோர் விவகார அதிகார சபை சுற்றிவளைப்பில் ஈடுபட்டது.

அதற்கமைய, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் 7 அரிசி ஆலைகளில் நிறமூட்டிகள் கலந்த அரிசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


அந்த ஆலைகளிலிருந்து 50 ஆயிரம் கிலோகிராம் கலப்படம் செய்யப்பட்ட அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள அரிசியின் மாதிரிகள் அரச இரசாயனப்பகுப்பாய்வு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டது.