மோட்டார் சைக்கிள் ஓடுபவரா நீங்கள் ? அப்படியானால் நீங்கள் அவதானிக்க வேண்டிய 10 விடயங்கள்

இளைஞர்களே !
அண்மைக்காலமாக நமது பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகமாகிய வண்ணமும் உயிர் இழக்கும் வீதமும் அதிகரித்தவண்ணம் உள்ளன இதற்கு காரணம் என்ன
ஆம்
வேகம்

நீங்கள் அவதானிக்க வேண்டிய 10 காரணிகள் 

01) தற்போது நம் அனைத்து பிரதான பாதைகளும் கார்பெட் இடப்பட்டு வீதி அகலமாக்கப்பட்டுள்ளன எனவே ஒடுக்கமான பாதையில் ஓடுவதை விட அகலமான பாதையில் வேகமாக செல்லும்போது அதன் வேகம் நமக்கு குறைவானமாதிரியே உணர்வோம் அதை விட முன்னால் வரும் வாகனத்தின் வேகத்தையும் சரிவர கணிப்பிடமுடியாது இதன் காரணமாக இன்னும் வேகமாக செல்வதால் திடீரென நிறுத்தும் சந்தர்ப்பம் வந்ததும் நிறுத்தமுடியாமல் விபத்துக்குள்ளாகிறோம்.

02) நாம் கார்பெட் வீதியால் மிகவேகமாக செல்லும்போது பாதைக்கும் டயருக்கும் இடையிலான தொடுகை மிக குறைவு இதன்போது வெளியில் வீசும் காத்து அதன் வேகம் நம்மில் தாக்கும் போது நாம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகிறோம் ஆம் நாம் வேகமாக செல்லும்போது வெளியில் வீசும் காத்து அதன் வேகம் என்பன பற்றியும் சிந்திக்கவேண்டியது அவசியம் (சும்மா வெட்ட வெளியில் போனவர்கள் என்னென்று இந்த post இல் மோதினார் என்று பேச கேட்டுள்ளோம் )

03) வளைவுகளில் நாம் செலுத்தும்போது நமது நினைப்பு எந்த வேகத்திலும் போய் வெட்டலாம் என்பது
நமது வீர செயல்களை வளைவுகளில் காட்டக்கூடாது ஏனெனில் ஒவ்வொரு வளைவுக்கும் ஒவ்வொரு வேகம் உண்டு அதாவது ஒரு வேகத்தில் நாம் வளைவுகளில் திரும்பும் போது அங்கு மையநீக்க விசை எனும் விசை ஒன்று தொழிற்படும் இந்த விசை தொழில்பாட்டாலே நம்மை வெளியில் தூக்கி எறியாமல் சரியாக போக உதவுகிறது இந்த விசை முறியும் அளவுக்கு நம் வேகம் இருக்குமாயின் நாம் வளைவுகளில் இருந்து வெளியில் தூக்கி வீசப்படுவோம். எந்த வேகத்தில் போனால் சரியாக செல்லலாம் என கணித்தே அந்த வேகக்கட்டுப்பாட்டு பலகைகள் இட்டிருப்பார்கள் அதை மதித்தால் உயிர் நம் வசம்.

04) இளம் வயதினர் போட்டிக்கு செலுத்துதல் போட்டிக்கு செலுத்தும்போது இளமையின் துடிப்பு வெளிப்படும் அது வெளிப்பட வெளிப்பட மூளை செயல் குறையும் வேகம் கட்டுப்பாட்டை மிஞ்சும் அதுவே உயிரை கொள்ளும்

05) முந்திச்செல்லுதல் தொடர்பாக பல வீதி கட்டுப்பாடுகள் உள்ளன நீண்ட ஒற்றை கொடு எனில் நாம் முந்திச்செல்ல இயலாது
நீண்ட இரட்டை கோடு எனில் முந்தவோ அல்லது அதை வெட்டி மறுபக்கம் செல்லவோ கூடாது இந்த இடங்களில் என்ன சிக்கல் என்றால் இப்படியான குறியீடுகளில் முன்னால் வரும் வாகனங்கள் இதில் ஒருவருமே முன்னால் வரும் வாகனத்தை முந்தி வரமாட்டார்கள் எனும் நினைப்பில் வேகமாக வருவார்கள் நாம் முந்தி சென்றால் முந்தியே சென்றுவிடலாம் மேலே

06) மோட்டார் சைக்கிள் செலுத்தும்போது செல்லிடப்பேசியை பாவிக்காமல் விடுவது நல்லது அநேகமானவர்கள் பேசுகிறார்கள் குறுந்தகவல் அனுப்புகிறார்கள் நண்பன் வாரியாடா என்று போடுவார் இவர் இந்தா வந்திட்டேன் மச்சான் என்று போட்டுத்து நிமிர்ந்தால் முன்னால் இந்த வந்துட்டேன் என்று வருவான் ஆலடியன்

07) வாகனத்தை வெளியில் எடுக்கும் போது சக்கர காத்தின் அளவுகளை சரிபார்த்து கொள்ளுங்கள் காத்தின் அளவு உங்கள் வேகத்திலும் கட்டுப்பாட்டிலும் பெரிதும் தாக்கம் செலுத்தும் அரைகுறை காத்து வாழ்க்கையை அரைகுறையாக்கிவிடும்.

08) இரவில் பயணிப்பதாயின் ஹெல்மெட் வைசர் கண்ணாடி சிறந்ததா என சரிபாருங்கள் முன்னால் வரும் வாகனத்தின் ஒளி படும்போது அது பட்டு தெறிப்படைவதால் உங்களுக்கு முன்னால் போகும் வாகனங்கள் தெரிவது கடினமாக இருக்கும் வைஸரை மேல் தூக்கிவிட்டு மெதுவாக செல்வது சிறந்தது கறுப்பு மாடுகளும் தெரிவது கடினம்.

09) கூடியவரை வீதியின் ஓர வெள்ளைக்கோட்டுக்கு அருகில் பயணிக்க பழகிக்கொள்ளுங்கள் நடுவில் செல்வதை தவிருங்கள்

10) முந்திச்செல்ல எப்போதும் இடம் கொடுங்கள் சும்மா மெதுவாக சென்றுவிட்டு யாராவது முந்த வந்தால் மட்டும் வேகமாக சென்று அப்படியே முந்தி சென்றுவிடாதீர்கள்

நண்பர்களே என்னதான் நம் வாகனம் நம் எரிபொருள் நம்மிடம் அனுமதிப்பத்திரம் இருந்தாலும் நாம் பயணிக்கும் வீதி ஊரவனின் வீதி அதில் பல கட்டுப்பாடுகள் மட்டுப்பாடுகள் உள்ளன அதைவிட விஞ்ஞானரீதியாக நம் வேகத்தை கட்டுப்படுத்தும் பல வெளிக்காரனுகளும் செல்வாக்கு செலுத்துகின்றன நம்மில் எனவே சரியான இடத்தில் சரியான வீதி கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து நம் குடும்பங்களை சொந்தங்களை மனதில்கொண்டு ஒழுங்காக செலுத்தி இன்னுயிரை பாதுகாத்து பெறுமதி இல்லா உடல் அங்கங்களையும் பாதுகாப்போம்.

- லட்சுமி- 

மறக்காமல்  உங்கட பேஸ்புக்கில்  ஷேர்  பண்ணுங்க