கல்லடி இராமகிருஷ்ணமிசனில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் 182 ஆவது பிறந்த தின நிகழ்வுகள்


(சிவம்)
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் 182 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டங்கள் இன்று செவ்வாய்க்கிழமை (28) கல்லடி இராமகிருஷ்ணமிசனில் நடைபெற்றது.

கல்லடி இராமகிருஷ்ணமிசன் தலைவர் சுவாமி பிரபு பிரேமானந்தா மற்றும் சுவாமி சிவசானந்தா ஆகியோர் ஹோமம் மற்றும் பூஜைகளை நடாத்தினர்.
கல்லடி சிவானந்தா வித்தியாய மாணவர்கள், மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் பாடசாலை, கல்லடி விவேகானந்தா மகளிர் பாடசாலை மாணவிகள் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்கள் பக்திப் பாடல்கள் மற்றும் பஜனைப்பாடல்கள பாடினர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கமும் கலந்து கொண்டார்.

கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக நேற்று திங்கட்கிழமை மாலை (27) பகவானின் திருவுருவப்பபடத்தை தாங்கிய இரத பவனி மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி, மாதர் வீதி, பழைய கல்முனை வீதி, கல்லடி மணிக்கூட்டக் கோபுரம் வரை சென்று மிசனை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.