பாடசாலை சீருடை , ஆசிரியைகளின் கர்ப்ப கால உடைகளில் மாற்றம் வேண்டும்

ஒவ்வொவ்வொரு மாகாணங்களில் நிலவும் தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப பாடசாலை சீருடைகளின் வடிவத்தையும் அவற்றின் நிறங்களிலும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்” என, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். மேலும், “கரு தரிக்கும் ஆசிரியைகளுக்கும், கர்ப்பகாலத்தில் உடைமாற்றம் கொண்டு வரவேண்டியது அவசியமாகும் எனவும்” அவர் குறிப்பிட்டார்.


குருநாகல் மலியதேவ வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் ​அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், பாடசாலை மாணவர்களின் மன நிலைக்கும் மன சுதந்திரத்துக்கு ஏற்ற வகையிலும் பாடசாலை சீருடைகள் வடிவமைக்கப்பட வேண்டும்.

பாடசாலை மாணவர்கள் தங்களுடைய வெண்ணிற ஆடையை அழுக்கு படாமல் சுத்தமாக வைத்திருக்க அவர்கள் தொடர்ந்து முன்னெடுத்துவரும் முயற்சிகளையும் செயற்பாடுகளையும் நான் அவதானித்துள்ளேன்.
பாடசாலை மாணவர்கள், அதுபோன்ற சிக்கல்களுக்கும் மனநிலைக்கும் மத்தியில் கல்வி செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது” என்றார்.

இதேவேளை, சில ஆசிரியைகள் கர்ப்ப காலத்தில் புடவையை அணிந்துக்கொண்டு பாடசாலைக்குச் செல்வதால் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால் அவ்வாறான ஆசிரியர்களுக்கு கர்ப்ப காலத்தில் முறையான ஆடை ஒன்றை தெரிவுசெய்துகொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார். -