பிரதேச செயலக மட்ட கிறிக்கட் சுற்றுப்போட்டியில் துறைநீலாவணை மத்தியவிளையாட்டுக்கழகம் சம்பியனாகத் தெரிவு

(சா.நடனசபேசன்)

ம.தெ.எ பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக 2017ம் ஆண்டு கிரிகெட்  சுற்றுப்போட்டியில் சம்பியன் கிண்ணத்தை இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் செட்டிபாளையம் நியூட்டன் வி.கழகத்தை வீழ்த்தி துறைநீலாவணை மத்திய விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது
கடந்த காலங்களில் பிரதேச மற்றும் மாவட்டமட்டங்களில் துறைநீலாவணை மத்தியவிளையாட்டுக்கழகம் கரப்பந்தாட்டப்போட்டியில் சாதனைபடைத்துவந்த நிலையில் 2017 ஆண்டுக்கான  பிரதேச செயலகமட்டத்தில் நடாத்தப்பட்ட கிறிக்கட் மென்பந்துசுற்றுப்போட்டியில் துறைநீலாவணை மத்தியவிளையாட்டுக்கழகம் சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டு சாதனைபடைத்துள்ளது

இவ்வாறான சாதனைபடைத்த மத்தியவிளையாட்டுக்கழக வீரர்களை  கிராமத்தின்  பொது அரமப்புக்கள் பாராட்டியுள்ளனர்